உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பது இடத்திலும் இருந்து வருகிறது. இந்த இரு அணிகளும் அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் இழந்து விட்டது என்று சொல்லலாம்.

ஆனால் அதை தவிர்த்து வேறு அணிகளுக்கும் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற வேண்டும் என்று இருக்கின்றது. அதற்கு இந்த புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பங்குபெறும் என்றும் விதி உள்ளது. ஆகையால் இவ்விரு அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இன்றைய போட்டியில் கலந்து இறங்கினார். டாஸ் என்ற பங்களாதேஷ் அணி முதலில் [பௌலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிசங்கா மற்றும் பேரிரா களமிறங்கினர். முதல் ஓவர் பேரிரா நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் வந்த குசல் மெண்டிசன் 19 ரன்கள் எடுத்த வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடிகொண்டிருந்த நிசங்கா 41 ரன்னில் அரை சதத்தை தவறவிட்ட நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.சதீரா 41 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன்பின் வந்த ஏஞ்சிலோ மேத்திவுஸ் ஒரு பந்து கூட சமாளிக்காமல் நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்து வெளியே அனுப்பினர். இதற்கான காரணம் என்னவென்றால் அவர் மைதானத்திற்குள் வந்து வெளியே உள்ளவர்களிடம் ஹெல்மெட்டை மாற்றி எடுத்து வர கூறியிருந்தார். இந்த நேரத்தில் அவர் விதியை மீறி கிரேஸில் நிற்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார் என்று பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார்.

பின்னர் சலசலப்புக்கு பின்னால் அவருக்கு நடுவர்கள் கொடுத்து அவரை வெளியே அனுப்பினார். 149 வருட கிரிக்கெட் வரலாற்றில் எதுவே ஒரு வீரருக்கு டைம் அவுட் கொடுத்து வெளிய அனுப்புவது முதல் முறையாகும். விதியின் படி ஒரு வீரர் அவுட் ஆகி வெளியேறினால் அடுத்த வீரர் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் வந்து ஆடுகளத்தில் நின்று கார்ட் எடுத்து போட்டியில் தொடர வேண்டும். ஆனால் பந்து வீச்சாளர்கள் அது போன்று விதி கிடையாது. தாமதமாக வேண்டும் ஆனாலும் அவரை பந்து வீசலாம். இந்த விதியின்படி தான் நடுவர்கள் அவரை வெளியே அனுப்பினார்கள். 149 கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருந்த முறையில் வீரர் வெளியாகி உள்ளார்.




