உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த 2019 வருடம் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் கடந்த 2019ல் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோத இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியானது வரும் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது சென்னையில் உள்ள புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனால் சென்னை ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் 2023 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றியை காண ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கின்ற்றனர்.
ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேத பந்தில் ஜாகீர் கான் தன்னுடைய கருத்தை பற்றி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் “நீங்கள் சென்னையில் விளையாடும் போது முதல் பேசும் பொருள் எதுவென்றால் நீங்கள் முதலில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். மேலும் கூறியவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து பும்ரா மற்றும் சிராஜ் சேர்ந்து மூன்றாகப் பந்துவீச்சாளர்களையும் பணியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மூன்று சுழற்ந்து பந்து வீச்சாளர்களும் இடம் பெறும் பொழுது ஷர்தூல் தாக்கூர் அவரது இடத்தை இழப்பார் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ஜாகீர் கான்.மேலும் இது குறித்து பேசிய சேவாக் கூறுகையில் “பொதுவாக நீங்கள் மெதுவாக மற்றும் டர்னிங் விக்கெட்டுகளை சென்னை மைதானத்தில் எதிர்பார்க்கலாம்.
ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் எங்களிடம் மிகவும் வலுவான சுழல் துறை உள்ளது. ஆஸ்திரேலியா சுழலுக்கு எதிராக போராடியதை நாங்கள் சமீபத்தில் பார்த்தோம். முதல் இரண்டு ஆட்டங்களில் அவர்கள் தோல்வியடைந்தனர். மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிக திருப்பம் இல்லை, அதனால்தான் அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

இவர்கள் கூறுவது போல சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே கை கொடுக்கும். அதுவும் அஸ்வின் இந்த மைத்தனத்தில் மிகவும் திறமையாக பந்துவீசும் ஒருவர் என்பதினால் அஸ்வின் களமிறங்க அத்தியாகி வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அவருடன் சேப்பாக்கம் மைத்தனத்தில் அனுபவம் அதிகம் கொண்ட ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.



