உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். அந்த நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் முதலில் செய்ய விரும்பியது.

அதன் படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.இப்ராஹிம் சத்ரான் நிலைத்து நிற்க முடியாமல் 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறு அதன் பின் வந்த ரஹ்மத் ஷா மூன்று ரன்கள் எடுத்த நிலை விக்கெட் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 பந்துகளை 80 ரன்கள் அடித்த நிலையில் அவரும் தனது விக்கெட்டை இழந்து திரும்பினார்.
அஸ்மத்துல்லா உமர்சாய், 14 ரன்கள் வெளியேற அதன் பின் அதன்பின் வந்த இக்ரம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன் பின்வந்த ரஷித் கான் 23 ரன்களும் முஜீப் 28 ரன்களை அடித்திருந்தனர். ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பலாக விளையாடிக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி அதன் பின் நிதானமாக விளையாடி 40.9 ஓவர்களில் 284 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் போது இங்கிலந்து அணியின் வீரர் சாம் கரண் செய்த ஒரு விஷயம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஆப்கானிதான் வீரர் குர்பாசுக்கு எதிராக 9-ஆவது வரை வீசிய அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 20 ரன்கள் குவித்து மோசமாக பந்துவீசி இருந்தார்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து அவர் செய்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த மோசமான பந்துவீச்சிற்கு பிறகு அடுத்த ஓவரில் பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த அவர் அதிருப்தியில் இருந்தார். அந்த நேரத்தில் மைதானத்தில் பவுண்டரி லைனின் அருகில் இருந்த கேமராமேன் ஒருவர் அதனை படம் பிடிக்க முயன்றார். ஏற்கனவே ரன்கள் கசிந்த வருத்தத்தில் இருந்த சாம் கரன் தனது கோபத்தை கேமரா மேன் மீது காட்டினார்.
#CWC2023 Sam Curran gets physical with the cameraman. pic.twitter.com/ilSSUrRO2I
— Alan Owen (@alanbowen) October 15, 2023
படம்பிடிக்க வரும் போது கேமராமேனை சாம் கரன் கோப முகத்துடன் தனது கையால் தள்ளிவிட்டார். அவரது இந்த மோசமான செயல் தற்போது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றுமின்று பேட்டிங்கிலும் சாம் கரண் சொதப்பியது குறிப்பிடதக்கது.



