இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை போட்டியானது தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே இந்தியா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது. மேலும் இந்த போட்டியில் விளையாடும் வீரர்களே அதிகபட்சம் உலக கோப்பை போட்டியில் பங்குபெறுவர்கள் என்று கூறப்பட்ட நிலையில் தான் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

அப்படி இந்த அணியில் அஸ்வின், சாஹல், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளத நிலையில் அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சஞ்சு சாம்சன் இந்திய அணியோடு பயணம் செய்யும் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு சமீப காலத்தில் ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடுவரும் சூரியகுமார் யாதவ் அணியில் பெற்றுள்ளார். இதனால் ரசிகர்கள் பலவிதமான விமர்சனங்களை இந்த அணியின் மீது வைத்தனர்.
மேலும் ஹர்திக் பந்தியாவும், ஷர்துல் தாகூர் இருவரும் வேகப்பது ஆல் ரவுண்டர்களாக இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இந்திய அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிக்குயில் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு தூணாக நின்ற சிவம் துபே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

அவர் சமீபத்தில் கம்பீர் கொடுத்த பேட்டியில் “இந்திய அணியின் தேர்வாளர்கள் நிச்சயம் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு பெயர் என்றால் அது சிவம் துபே. ஏனென்றால் அவர் எந்த வகையான ஃபார்மில் இருக்கிறார். உங்களுக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பேக்அப் தேவை. ஷர்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்கப்பாக இருக்க முடியாது. நிச்சயம் அந்த இடத்திற்கு சரியான ஒரு வீரர் சிவம் துபே தான் என்றார் கம்பீர்.
ஆனால், இந்திய தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி, கம்பீருடைய கருத்திற்கு உடன்படவில்லை. என்று அவர் கூறுகையில் “நாம் ஷிவம் துபே விளையாடியதை பார்த்திருக்கிறோம். அவர் டி20களில் சதம் அடித்திருப்பார், ஆனால் இது முழுக்க முழுக்க ஃபார்மேட் மற்றும் வித்தியாசமான போட்டி. கவுதமுக்கு உரிய மரியாதையுடன் இது எனது பார்வை இருந்து வந்த கருத்து. ஏனென்றால் சிவம் துபே பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் கொஞ்சம் தடுமாறினார் என்றார்.

இந்நிலையில் கம்பீர் அணி பற்றியும் சில கருத்துக்களை கூறினார். ஆதவாது இது ஒரு ஒழுக்கமான அணி, என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல அணி தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆனால் எங்காவது ஒரு மணிக்கட்டு ஸ்பின்னர் தேவை. ரவி பிஷ்னோய் அல்லது யுஸ்வேந்திர சாஹல் நிபந்தனைகளின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இந்தியாவில் விளையாடும்போது இரண்டு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் வைத்திருப்பது முக்கியம் என்றார் கம்பீர்.




