உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்டது. மேலும் முக்கியமாக இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுகிறது என்பதினால் ரசிங்கர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வருட உலக கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என எட்டு அணிகள் நேரடியாகவும், உலக கோப்பை குவாலிபயர் சுற்றில் சிறப்பாக விளையாடிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும் இந்த உலக கோப்பையில் பங்கு பெறுகின்றனர். மேலும் முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் நடைபெறுகிறது.
அதே போல இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது வரும் ஆக்டோபர் 15ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனிடையே பலர் உலக கோப்பை போட்டிக்கான வெற்றியாளர் குறித்து கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளருமான கங்குலியும் தனனுடைய கருத்தை கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “இதனை சொல்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என 3 கிரிக்கெட் அணிகளும் மிகச்சிறப்பாக செயல்படும். மேலும் பெரிய போட்டிகளில் சிறப்ப செய்யப்பட்டு வரும் நியூசிலாந்து அணி இந்த லிஸ்டில் இருக்கிறது. ஆனால் 5 வதாக நான் ஒரு அணியை தேர்வு செய்ய விரும்புகிறோன் எந்த அணிதான் பாகிஸ்தான். பாஸ்கிதான் நல்ல தரமான கிரிக்ட்டை விளையாடி வருகிறது.

அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் நடப்பதினால் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மொத்தம் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் அழுத்தம் என்பது இந்திய அணிக்கு கண்டிப்பாக இருக்கும். இதற்கு முன்னர் விளையாடிய போதும் இருந்தது. கடந்த உலக கோப்பை போட்டியின் போது ரோஹித் ஷர்மா இந்து சதங்களை விளாசினார். அப்போது அவருக்கு அந்த சூழ்நிலையில் அழுத்தம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் அழுத்தம் என்பது ஒரு பிரச்சனையே கிடையாது. அவர்கள் அந்த அழுத்தில் வெற்றியை பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். ராகுல் ட்ராவிட் விளையாடும் போது அவருக்கும் அழுத்தம் என்பது இருந்தது. இப்போது அவர் இந்திய அணியை வழிநடத்தும் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இப்போதும் அவருக்கு தலைமை பயிற்சியாளராக அழுத்தத்தை தர வேண்டிய இடத்தில் இருக்கிறார். எனவே அழுத்தம் என்பது முடியாது, இதனால் அது ஒரு பிரச்சனையே கிடையாது என்றார் கங்குலி.




