ரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது.

இந்த போட்டியில் இந்தியா துரதிஷ்ட வசமாக பெரும் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணியாது 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு இந்தியா இந்த போட்டியில் சிறந்த அணியாக இருந்தது. மேலும் இந்த உலக கோப்பையில் எல்லா போட்டிகளிலும் வென்றிருக்கிறது என்றும் இந்தியா தான் இந்த போட்டியில் போட்டியில் வென்றிருக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தான் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்

பலருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். சிறந்த அணி உலகக் கோப்பையை வெல்லவில்லை என்று சில நிபுணர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டேன். அது முற்றிலும் உண்மை இல்லை. நான் கேள்விப்பட்ட வினோதமான அறிக்கைகளில் இதுவும் ஒன்று. உண்மையில் இந்த உலகக் கோப்பையையில் வென்ற அணிதான் சிறந்த அணி.

இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல பார்மில் இருந்ததது. ஆனால் முதல் இரண்டில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. சிறந்த அணி மட்டுமே உலகக் கோப்பையை வெல்லும். இந்தியா 10 போட்டிகளில் வென்றது ஆனால் ஒரு மோசமான ஆட்டத்தை விளையாடியது. உண்மை என்னவென்றால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நாக் அவுட் ஆகும். லீக் கட்டத்தில் நீங்கள் முதலாவதா அல்லது நான்காவதா என்பது முக்கியமில்லை.
எட்டு லீக் ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெறுவது எளிது. எந்த தவறும் செய்தாலும் இரண்டில் இரண்டில் வெற்றி பெறுவது கடினம். சிறந்த அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வோம். இந்தியா சரியாக விளையாடவில்லை. , யதார்த்தத்தை விட்டு ஓடிவிடக் கூடாது,” என்று முடித்தார் கம்பீர்.



