அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் தூணாக நின்று விளையாடிய இந்திய பொறுமையாக ரன்களை குவித்தது. சொல்லப்போனால் ஹர்திக் 87 ரன்களும், இஷான் கிஷான் 82 ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தால் இந்தியா இந்த அளவிற்கு கூட ரன்களை எடுத்திருக்காது. அப்படிப்பட்ட நிலையில் நிலையில் தான் கார்த்திகை மற்றும் இஷான் கிஷான் பாட்னர்ஷிப்பை உடைக்காதது குறித்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

அவர் க்ருகாய்ல “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மாற்றங்கள் எந்த அர்த்தமும் இல்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் உங்களிடம் மூன்று பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். அப்படிப்பிட நிலையில் நீங்கள் ஒரு முனையிலிருந்து குறைந்தபட்சம் ஒருவரையாவது தொடர்ந்து வீச வைத்திருக்க வேண்டும்.
உண்மையில் நீண்ட ஸ்பெல்களில் செல்ல முடியாது என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒருவர் ஒரு முனையிலிருந்தும், ஷதாப் அல்லது நவாஸ் மறுமுனையிலிருந்தும் பந்துவீசியிருக்கலாம் என்றார் கவாஸ்கர். மேலும் பேசிய அவர் கூறுகையில் “கிஷன் மற்றும் பாண்டியா இடையேயான பார்ட்னர்ஷிப்பை உடைக்க, நடு ஓவரில் தங்கள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை வீசாமல் பாகிஸ்தான் ஒரு தந்திரத்தை தவறவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில் “பாகிஸ்தான் ஒரு தந்திரத்தைத் தவறவிட்டது என்று நான் நினைக்கிறேன், அதற்கு இந்தியா ஒரு பெரிய நன்றியைச் சொல்லும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் பார்ட்னர்ஷிப்பை நன்றாக அனுமதித்தது, இல்லையெனில் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால், அப்போது இந்தியா 175, 200 ரன்களைக் கூட எட்டுவதற்கு சிரமப்பட்டிருக்கலாம் என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.



