அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியானது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இருக்கிறது, மேலும் இந்த தொடரில் 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படுவதினால் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த முறை 50 போட்டி நடைபெறும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள ஆகிய அணிகள் ஒரு குழுவிலும் மீதம் இருக்கும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் மற்றொரு குழுவிலும் இருக்கின்றனர். அதவது ஒவ்வொரு குழுவில் இருக்கும் அணிகள் அந்த குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும். அதன் பிற்காடு முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பின்னர் இரண்டவது சுற்றில் தேர்வான நான்கு அணிகளும் ஒவ்வொரு முறை விளையாடும், இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இருந்து சுற்றுக்கு முன்னேறும் என்பதினால் அணிகள் தொடர்ந்து வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த முறையால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணியானது உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பு வந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ” ஆசியா கோப்பையில், நாங்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பற்றி பேசுகிறோம். ஆனால் இலங்கையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள், மேலும் அவர்கள் ஆசிய கோப்பையை வென்றுள்ளனர். இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
நான் இந்தியாவைப் பற்றி மட்டுமே ஆர்வமாக உள்ளேன், மற்றவர்கள் அரையிறுதிக்கு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒவ்வொரு வீரரும் தனது உடலை நன்கு அறிந்திருக்கிறார்கள் மற்றும் புரிந்துகொள்கிறார்கள். பிசியோ தெரபிஸ்ட்டுக்கும் தெரியும். ஆட்டக்காரர்களுக்குத் தெரியும். எனவே அந்த வீரருக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம், ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் அவருக்கு மூன்று-நான்கு நாட்கள் ஓய்வெடுக்கவில்லை என்றால், அந்த காயம் மோசமடையக்கூடும் என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.

இந்நிலையில் நாளை தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடதக்கது.



