பும்ராவின் மறு பிரவேசத்தைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து வந்த நிலையில் அடுத்ததாக 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. அதை முடிந்து கொண்டு அயர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவரும் இந்திய அணியின் சில வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத், பும்ரா குறித்து பேசியுள்ளார்.

கிளென் மெக்ராத் கூறியது :
அவர் கூறுகையில் “பும்ரா விதிவிலக்கானவர், அவர் தனித்துவமான ஒரு பந்துவீச்சாளர். அவர் பந்து வீசும் விதம் அவரது ரன்-அப் மற்றும் அவரது பந்து வீச்சு மிகவும் தனித்துவமான ஓன்று. ஆனால் அவர் அப்படி பந்துவீசும் போது அவருடைய வீசும் முறையினால் அவரது உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, எனவே இந்த அழுத்தத்தை சமாளிக்க அவர் வலுவாக இருக்க வேண்டும். அவர் அதைச் செய்தார் என்றால் அவரால் இன்னமும் சில ஆண்டுகள் இந்தியாவிற்காக விளையாட முடியும்.

தற்போதைய சர்வதேச அட்டவணை, ஐபிஎல் மற்றும் பிற டி20 போட்டிகள் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடுவதை கடினமாக்குகின்றன. ஆனால் சில பந்துவீச்சாளர்களினால் அதைச் செய்ய முடியும். இப்போதெல்லாம் கிரிக்கெட் அதிகமாக விளையாடுகிறார்கள். இதனால் உங்கள் உடலில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நீங்கள் அதிலிருந்து எப்படி குணமடைவது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கர்ட்னி வால்ஷ் போன்ற தோழர்கள் தங்கள் உடலை எவ்வாறு காயங்களில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படி ஏற்படும் போது என்ன சேயாய் வேண்டும் என்பதை பற்றி பல ஆண்டுகளாக கட்டியிருக்கின்றனர். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்தேன் இதனால் என்னால் காயத்திலிருந்து திரும்புவதை எளிதாக்க முடிந்தது என்றார் கிளென் மெக்ராத்.



