உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி இன்னமும் 1 சதம் அடித்தார் என்றால் சச்சின் சாதனையை சமன் செய்து விடுவார். மேலும் அது இந்த உலக கோப்பை போட்டியில் நடக்கும் என்று பலரும் கணித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் முன்னாள் தென்னாபிரிக்க அணியின் வீரர் கிரேம் ஸ்மித் விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் கேரியர் குறித்தும், சச்சினுடன் ஒப்பிடும் பேசியுள்ளார் விராட் கோலி. அவர் பேசுகையில் “விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்கை என்பது மிகவும் அற்புதமான ஒன்று ஆனால், அவருடைய ஒரு நாள் புள்ளிவிவரங்களையும், பதிவையும் பார்க்கும் போது அது மனதைக் கவரும் என்று நினைக்கிறேன்.

அவரது சர்வதேச வாழ்க்கையில் அவர் உருவாக்கிய தரம் என்னுடைய கருத்துப்படி அவர் சச்சினை விட அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் புத்திசாலி குறிப்பாக சேசிங் செய்யும் போது அவர் அதனை கட்டுப்படுத்தும் விதம். அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நாள் ஆட்டத்தை விளையாடும் போது அழுத்தத்தை நிர்வகிப்பதில் ரோஹித் ஷர்மாவுடன் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார்
மேலும் அவர்கள் பேட்டிங்கில் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அதாவது விராட் கோலியைப் பற்றி அதிகம் பேசப்பட்டாலும், விராட் கோலியின் ODI சாதனை எவ்வளவு அற்புதமான ஓன்று என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விராட் கோலியின் ஒரு நாள் சாதனை மனதைக் கவரும் என்று கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.



