அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் இந்தியா சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சொல்லலாம்.

கடந்த 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலிருந்து இம்முறை விளையாட போகும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் அப்போதை விட தற்போது அதிகப்படியான அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் 2019க்குப்பின் சதமடிக்காத கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இதே போன்ற நிலைமையில் தான் விராட் கோலிக்கும் குறித்து பேசியுள்ளார் கிரேக் சேப்பல்.
அவர் கூறுகையில் “சாம்பியன் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பெரிய போட்டிகளில் அசத்தும் திறமை கொண்டவர். அவர் தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அசத்த விரும்புவார். இந்தியாவின் பயிற்சியாளராக வந்த பின் ஒரு முறை என்னுடைய ஹோட்டல் அறையில் இருந்த போது சச்சின் எனக்கு போன் செய்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றார். அவர் என்னிடம் கேட்டார் ஏன் இப்போதெல்லாம் பேட்டிங் கடினமாக இருக்கிறது? அனுபவத்தால் அது எளிமையாக வேண்டுமே? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு நான் கூறினேன் அனுபவத்தால் பேட்டிங் எளிமையாகி விடாது என்று பதிலளித்தேன். அதாவது இளம் வீரராக இருக்கும் போது மற்றதை பற்றி யோசிக்காமல் ரன்களை எடுப்பதை மட்டுமே விரும்புவீர்கள். இருப்பினும் நாளடைவில் எதிரணி நம்மை வீழ்த்த திட்டம் திட்டுவார்கள் என்று உங்களுக்கு தோன்றும். அதே போல எதிரணியும் உங்களுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொள்கின்றனர்.
இது போன்ற தகவல்கள் உங்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இளமையில் என்ன செய்தீர்கள் என்று சிந்திக்க வேண்டும். அப்போது செய்ததை இப்போது செய்தால் கண்டிப்பாக இப்போதைய நிலைமையும் கட்டுப்படுத்தலாம். அதை தான் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி செய்தார். அதை நீங்கள் மீண்டும் போய் பார்த்தால் அந்த ஷாட்கள் தனித்து நிற்கும். அவரது பெரும்பாலான ஷாட்டுகள் பந்தின் தகுதிக்கேற்ப விளையாடப்பட்ட வழக்கமான ஷாட்டுகளாகும். என்னை பொறுத்தவரையில் அது ஒரு அற்புதமான மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்காகும்.

எனவே சிலவற்றை தவிர்த்து எளிமையை கடைபிடித்து அடிப்படை விசயத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி அடையலாம். அந்த வகையில் விராட் கோலி பெரிய ரன்களை எடுப்பதற்கு ஸ்பெஷல் உழைப்பை போட வேண்டும் என்று எனக்கு தெரியும். எனவே இந்த உலகக் கோப்பையில் எப்போதும் போலவே மற்றவற்றை பற்றி யோசிக்காமல் இந்த உலகக் கோப்பையை அணுகினால் அதிக ரன்களை விளாசி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தரமுடியும் என்றார் கிரேக் சேப்பல்.



