இந்திய கிரிக்கெட் அணியானது சமீப காலமாக மிகவும் தடுமாறி வருகிறது. சொல்லபோனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பை போட்டியில் கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு முறை கூட இவர்களினால் வெல்ல முடியவில்லை. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலாவது இந்தியா வெற்றி பெற்று இந்த சரித்திரத்தை மாற்றும் என்றிருந்த நிலையில் அந்த போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது பலருக்கும் வ்ருத்தத்தை கொடுத்தது.

இந்நிலையில் தான் முன்னள் இந்திய அணியின் வீரரும் வர்ணனையாளருமான ஹர்பஜன்சிங் ஏன் இந்திய ஆனால் வெல்ல முடியவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது ” எனக்கு தெரியவில்லை, எங்களிடம் இருந்த ஓன்று அவர்களும் இல்லை என்று சொல்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான். நாட்டிற்க்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் எந்த காலமாக இருந்தாலும் சரி அவர்களுடைய முக்கியமான குறிக்கோளாக இருப்பது தன்னுடைய தேசத்திற்கு வெற்றி பெற்று தருவதே ஆகும்.
நாம் கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செமி பைனல் வரையில் சென்றோம். ஆனால் நம்மால் வெற்றி என்பதை பெற்று ஐசிசி கோப்பையை கொண்டு வர முடியவில்லை. ஒரு வேலை அந்த அமைதிரியான பெரிய போட்டியில் ஏற்படும் அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பின்னர் மீண்டும் சிறப்பாக விளையாடும் திறன் ஓன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு மட்டுமே இருந்திருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் ஓரு அணியாக செயல்பட வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “உங்களிடம் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற பெரிய வீரர்கள் இருகின்றனர். இந்த பெரிய வீரர்களுடன் மீதி அணியில் இருக்கும் 8 பேரும் அணியின் நிர்வாகவும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் விளையாட வேண்டும், ஒரே பாதையில் தான் பயணிக்க வேண்டும்.
அணிக்காக நீங்கள் செய்யும் ஒரு சின்ன சின்ன விஷயங்கள் கூட குறிப்பாக ஒரு ரன் ஓடுவதை தடுப்பது அல்லது பிரமாதமான ரன் அவுட் செய்வது போன்றவை சிறியதாக இருந்தாலும் அவை அணிக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். எனவே ஒரு அணியாக செயல்பட்டால் அவர்களினால் பெரிய விஷயங்களை செய்ய முடியும், ஆனால் அங்கு தான் இந்திய அணி கொஞ்சம் தடுமாறுகிறது. ஒருவேளை அவர்கள் அணியின் திறமை வாரியாக இருப்பதை விட மிகச் சிறந்தவர்களாக இருக்காம் என்றார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில் இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோற்றாலும் வரும் அக்டோபர் மாதம் இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பாக உலக கோப்பை வருகிறது. மேலும் இந்த உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.




