அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் அனைத்து அணிகளுமே கிட்டத்தட்ட 3 போட்டிகள் விளையாடி விட்டனர்.இதனால் அவர்களின் அணியின் சாதகம் எது பாதகம் எனது என்பது குறித்து நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் என்ற ஆஸ்திரேலிய அணியானது இந்த உலக கோப்பையில் கொஞ்சம் தடுமாறிய வருகிறது.

குறிப்பாக இந்திய அணியை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 199 ரன்களை மட்டுமே குவித்தது. இது பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கவும் ஒரு விஷயமாக இருந்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை அவர்களுக்கு எதிராக பதிவு செய்தது.
இதன் மூலம் 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்து மோசமான நிலையை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று கணித்த நிலையில் அதற்க்கு மாறாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியானது 311 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே குவித்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இதனை மூலம் உலக கோப்பை வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

பின்னர் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் ஆஸ்திரேலியா வென்றது.இந்நிலையில் இந்த உலக கோப்பை போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் முதல் இரண்டு போட்டியிலும் மோசமாக விளையாடினார். இதனால் விமர்சனங்கள் பல எழுந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “அனைவரும் மேக்ஸ்வெல்லை “பிக் ஷோ” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் என்னை பொறுத்தவரை அவர் ஒரு “பிலாப் ஷோ” இந்த வார்த்தைகள் தான் மேக்ஸ்வெல்லுக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் இந்த தொடரை பொறுத்தவரையில் தன்னுடைய விளையாட்டை கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகிறார் என ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது



