இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவின் மறு பிரவேசத்தைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து வந்த நிலையில் அடுத்ததாக 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. அதை முடிந்து கொண்டு அயர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவரும் இந்திய அணியின் சில வீரர்களுக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர்.

மேலும் இந்த பரிசோதனையில் பும்ரா செயல்படுவது பொறுத்தே இந்திய கிரிக்கெட் உலக கோப்பை அணியில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில்தான் பும்ராவிற்கு தற்போது கேப்டன் பதவியும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு துணி கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பும்ரா குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்தியாவிற்காக விளையாட இருக்கிறார். அவர் பல காலமாக காயம் அடைந்த நிலையில் தான் திரும்பி வர காத்திருந்தார். இந்நிலையில் பும்ரா மீண்டும் வந்த பிறகு அவருக்கு நேரடியாக கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஆனதற்கும், ஃபிட்டாக இருப்பதற்கும் பும்ராவிற்கு எனது வாழ்த்துகள். அவர் மீண்டும் காயமடைய மாட்டார் என்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் நடக்க கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

அவர் அதிகமான போட்டிகளை மிஸ் செய்தார். சொல்லல்லபோனால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளிலும் அவர் அதிகமாக மிஸ் செய்தார். நான் இதற்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன் பேட்டிங்கில் ஒரு விராட் கோலி இருக்கிறார், அப்படி பௌலிங்கில் இருக்கும் விராட் கோலி பும்ரா தான். அவருக்கு வேறு எந்த பெரிய பெயரும் இதனை விட இருக்க முடியாது என்றார் ஹர்பஜன் சிங்.



