கிரிக்கெட்டில் பொதுவாக சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பது கடினம். அதுவும் வேகப்பந்து வீச்சாளராகவும் அதே நேரத்தில் விளையாட்டை முடித்து கொடுக்கும் ஒரு வீரராகவும் கிடைப்பது மிகவும் அரிது. அந்த வகையில் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய ஆல் ரவுண்டர் தான் ஹர்திக் பாண்டியா. ஏனென்றால் சிறப்பாக பேட்டிங் செய்து பின்னர் வேகப்பந்து வீச்சின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சாதாரண காரியம் கிடையாது.

சொல்லப்போனால் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தடுமாறிய போது பொறுப்பாக நின்று ரன்களை அடித்தார் ஹர்திக் பாண்டியா. ஆனாலும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்றும் அவர் சிறப்பாக உடற்தகுதியில் இருக்கும் போது ஏன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட கூடாது என்று பல ஜாம்பவான்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஹர்திக் பாண்டிய ஆல் ரவுண்டருக்கு இருக்கும் பணிச்சுமை பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “ஒரு ஆல்-ரவுண்டராக, எனது பணிச்சுமை வேறு யாரையும் விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். அணியில் ஒரு பேட்டர் சென்று பேட்டிங் செய்து தனது பேட்டிங்கை முடித்துவிட்டு திரும்பி விடுவார், ஆனால் நான் அதன் பிறகும் பந்துவீசுவேன். எனவே என்னைப் பொறுத்தவரை அப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் செய்வதற்கு தேவையான அனைத்து உந்துதல் மற்றும் அதற்கு தேவையான பயிற்சியை எடுத்துக்கொள்வேன்.

விளையாட்டு என்று வரும்போது, அது அணிக்கு என்ன தேவையோ அதைப் பற்றியது. மேலும் எனக்கு எத்தனை ஓவர்கள் தேவை என்பது அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்தத்யு. ஏனென்றால் 10 ஓவர்கள் தேவையில்லை என்றால், நான் 10 ஓவர்கள் வீசுவதில் அர்த்தமில்லை, ஆனால் 10 ஓவர்கள் தேவைப்பட்டால், நான் பந்துவீசுவேன். நான் வெற்றிபெற எனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று நான் எப்போதும் நம்பினேன்.
அதாவது விளையாட்டைப் படித்து அதன் மூலம் தன்னபிக்கையுடன் விளையாடுகிறேன். பௌலிங் செய்யும் போது எனக்கு நானே நம்பிக்கி கொடுத்து கொள்வேன். ஏனென்றால் எதிரணி, பேட்டிங், நான் தவறு செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில், ஒரு பேட்டராக என்னுடைய வேலையை அணியின் வீரர்களுடன் இணைத்து சிறப்பாக செய்ய விரும்புகிறேன்.

எனவே நான் உணர்ந்தது என்னவென்றால், என்ன நடந்தாலும், நீங்கள் உங்களை ஆதரிக்க வேண்டும், நீங்கள் உலகில் சிறந்தவர் என்று நீங்கள் நம்ப வேண்டும். இது உங்களுக்கு வெற்றியை உத்தரவாதப்படுத்தாது, ஆனால் அதே நேரத்தில், அது உங்களுக்குத் வெற்றியை நோக்கிச் செயல்பட உங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும், எனவே நடைமுறையில் உங்களை நம்புங்கள் என்றார் ஹர்திக் பாண்டியா.



