உலக கோப்பை 20203 தொடர்நது தற்போது இறுதி காட்டத்தை எட்டிய நிலையில் இறுதி போட்டியானது வரும் 19 ஆம் தேதி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதி போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நடேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுமாயின் இந்தியா மூன்றவது முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும்.

இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வியடைய வில்லை. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைவான ஸ்கோரிலேயே தங்களுடைய அற்புதமான பந்துவீச்சில் மூலம் இந்தியா வென்றது. இந்த நிலையில் தான் அஸ்திரலேய வீரரான ஹேசில்வுட் இந்தியாவின் பலவீனம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் ஒருநாள் தொடரில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை பதவு செய்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவினோம். அவர்களை எதிர்த்து பல முறை நாங்கள் விளையாடி இருக்கிறோம். எனவே அவர்களை பற்றி உலேயிருந்து வெளியே அனைத்தும் தெரியும்.. ஆனால் இந்த விஷயம் அவர்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவின் ஒரு நல்ல பலமான கிரிக்கெட் அணி. இந்த தொடர் முழுவதும் அவர்களின் ஆதிக்கம் என்பது இருந்துள்ளது. அவர்களுடைய பலவீனம் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக நாங்கள் வரும் ஞாயற்று கிழமை வரும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிகொள்ள தயாராக இருக்கிறோம் என்றார் ஹேசில்வுட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “சென்னை மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறிய ஸ்கோருக்கு எதிராக விளையாடிய போது சில விரிசல்களை மைதானத்தில் கண்டோம். எங்களுடைய அதிர்ஷ்டால் சில முக்கிய விக்கெட்டுகளை விரைவாக எடுக்க முடிந்தது. அகமதாபாத்தில் இங்கிலந்து அணிக்கு எதிராக மைதானம் தட்டையாக இருந்தது அதே போன்று இறுதி போட்டியிலும் இருந்து நன்றாக இருக்கும் என்றார் அவர்.6



