உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 39 வது போட்டியை ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியா அணி முதலிரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னால் பெற்ற நான்கு ஆட்டங்களிலும் வெற்றியை கண்டு பலம் வாய்ந்த அணி ஆகும் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இந்த நடப்பு உலக கோப்பை நன்றாக விளையாடி தற்பொழுது ஆறாவது இடத்தில் இருந்து வருகிறது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இன்று போட்டியில் வெல்லும் மணிக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அவர்களுக்கு சிறப்பாக வகையில் பயன் அளித்தது. ஆப்கானிஸ்தான அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து காரணத்துக்கு 291 ரன்களை குவித்து இருந்தது. ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான குருபாஸ் 21 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த ரகமத் ஷா 30 ரன்களிலும் உமர்சாய் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற முகமது நபி 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிக் இப்ராஹிம் சார்டன் மற்றும் ரஷித் கான் இணைந்து அணிக்கு நல்ல இலக்கை எட்ட உதவியினர். இப்ராஹின் சார்டன் 129 ரன்களும் ராஷித் கான் 35 ரன்களும் குவித்து இருந்தனர். உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முதன் முதலாக இப்ராஹின் சார்டன் சதத்தை குவித்துள்ளார்.இதற்க்கு முன்னாள் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாரும் இது வரை உலகக்கோப்பை போட்டியில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணி 49 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.



