உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மெண்டிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்

ஆனால் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பந்தில் ரோஹித் ஷர்மா போர் அவர்களின் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது இந்திய அணி.இலங்கை அணிக்கு 358என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக கோப்பை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிப்பது மட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கும் இந்திய அணி தகுதி பெற்று விட்டது. இந்நிலையில் இந்த வெற்றி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதும் கிடைத்த வெற்றிகளுக்கு பேட்ஸ்மேன்களை விடவும் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.

அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஹஸன் ராஸா இந்திய அணி மீது புதிய குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
அவர் கூறுகையில் “சமி மற்றும் சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆலன் டொனால்ட் மற்றும் மக்காயா என்டினியுடன் விளையாடியதைப் போலவே இருக்கிறார்கள். மற்ற அணிகளுக்கு பேட்ஸ்மேன்கள் இவர்களுக்கு எதிராக எப்படி விளையாடுவார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய பந்துவீச்சில் சீம் மற்றும் ஸ்விங் இரண்டுமே இருந்தது.
அதன் ஒரு பக்கமானது பளபளப்பு கூடுதலாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், பந்து கூட மாறுகிறது என்று நான் நம்புகிறேன். பிசிசிஐ ஐசிசி அல்லது ஒருவேளை மூன்றாவது நடுவர்களுக்கு அழுத்தம் ஓடுது இந்த பந்துகளை விநியோகிக்கிறது என்று நினைக்கிறேன். இந்த பந்துகள் ஆராயப்பட வேண்டும். இது என் கருத்து என்று கூறினார் ராசா.



