உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் தன்னுடைய கிரிக்கெட் விளையாடும் திறமையால் இந்தியா ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஜாம்பவான்கள் புகழும் அளவிற்கு பல சாதனைகளை படைத்திருக்கிறார். எந்த போட்டியாக இருந்தாலு, அந்த அணியாக இருந்தாலும், எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் களமிறங்கி பந்துகளை பார்க்க விடும் விராட் கோலியின் திறமையினால் ரன் மெஷின் என்ற பெயரையும் கிங் கோலி என்ற பெயரடையும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற நிறைய பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தும் நிலையில் 2 வகையான கிரிக்கெட்டிலும் தன்னை உட்படுத்தி சிறப்பாக செயல்படும் அவருக்கு 49க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். மேலும் சிக்ஸர் அடித்தால் தான் பெரிய கிரிக்கெட் வீரர் என்று சொல்லுபவர்கள் மத்தியில் தரையோடு பந்துகளை நாலாபுறமும் விளாசி அசத்தியவர் விராட் கோலி.
அந்த ஸ்டைலை பின்பற்றியே ரசல், பொல்லார்ட் போன்றவர்களை காட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்டு நவீன சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளது அவருடைய ஸ்பெஷலாகும். அத்துடன் ஒருவேளை எதுவுமே வேலைக்காகவில்லை என்றாலும் சிங்கிள், டபுள் எடுத்து அணியின் வெற்றிக்காக பாடுபடும் அளவுக்கு அற்புதமான ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சரித்திரத்தைப் படைத்து 2016 – 2021 தொடர்ந்து 5 வருடங்களாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் விராட் கோலி எதிரணியில் இருந்தாலும் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்வதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் “விராட் கோலி ஒரு சிறந்த ரோல் மாடல் என்று நான் நினைக்கிறன். எங்களைப் போன்ற கிரிக்கெட்டர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர். குறிப்பாக செயல்பாடுகள், ஃபிட்னஸ், போட்டிகளில் அவருடைய அணுகுமுறை மற்றும் பிராண்டிங் போன்றவற்றில் அவர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். எனவே கிரிக்கெட்டுக்கு விராட் கோலி மிகவும் கச்சிதமானவர்.

இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே பாகிஸ்தானிலும் நவீன கிரிக்கெட்டின் அம்பவன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு எடுத்த பின்னர் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தயாராகி வருகிறார்.




