உலக கிரிக்கெட் ரசிகர் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணி மொகாலியில் மோதின. இதில் நியூசிலாந்து இருந்து புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி பள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்து வந்தது. நியூசிலாந்து அணி இதற்கு முன்னதாக இந்தியாவிடம் தோல்வி பெற்றிருந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்தில் இருந்த வந்தது.

மற்றொரு பக்கம் ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இரு போட்டியில் மட்டுமே தோல்வி தழுவி வந்தநிலையில் அதன் பின் தொடர்ச்சியாக நான்கு போட்டியிலும் வென்று புள்ளி பட்டியல் 3 இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் முதலில் பில்டிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவருக்கு சரியான கை கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.2 அவர்களின் அனைத்து விக்கெட் இழந்து 388 இடங்களை மட்டுமே எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் கிடைத்த அடித்தளம் அதனை இடையில் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களும் டேவிட் வார்னர் 81 ரன்கள் ஜாஸ் இங்கிலீஷ் 38 ரன்கள் அடித்திருந்தனர். நியூசிலாந்தின் சார்பில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் பிலிப்ஸ் இரண்டு விக்கெட்களையும் ஹென்றி மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

139 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கி நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 383 ரன்கள் மட்டுமே அடித்தது. நியூசிலாந்தின் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர 114 ரண்களும் நீஷம் 58 ரன்களும் மிட்சல் 54 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பா மூன்று விக்கெட்டுகளையும். ஹெசில்வூட் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கட்டையும் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இறுதிவரை போராடிக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி இறுதியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.




