சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்து. இந்த தோல்வியை இந்திய ரசிகர்களாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்தியாவை சுற்றியுள்ள சிலர் இந்தியாவின் தோல்வியை கொண்டாடினர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியின் வீரர் அப்துல் ரசாக் இந்தியா தோல்வியை தழுவியதுதான் நல்லது என்று கூறினார்

இந்த நநிலையில் தான் இது குறித்து பேசியுள்ளனர் முன்னாள் வீரர்களான வாசிம் அகரம் மற்றும் கம்பீர். அவர் கூறுகையில் “இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் தோல்வியைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது நன்றாகவே இல்லை. குறைந்தது இது போட்டி என்று விட்டிருக்கலாம்.
நான் யாரையும் பெயரிடவில்லை, ஆனால் இரு நாடுகளிலும் சில பிரபலமானவர்கள் சில சமயங்களில் இந்த மாதிரியாக செய்கின்றனர். நீங்கள் உங்கள் நாட்டிற்காக தேசபக்தி உடையவர்கள், நாங்கள் நமக்காக இருக்கிறோம். அதை அங்கேயே முடிப்போம். ஒருவருக்கொருவர் நன்றாக இருங்கள். எல்லாரும் கஷ்டப்படும் நேரத்தில் அதனை கொண்டாட கூடாது. கடைசியில் அது வெறும் விளையாட்டுதான் என்றார் வாசிம் அகரம்.
மேலும் பேசிய இந்திய அணியின் வீரர் கம்பீர் கூறுகையில் “மற்ற அணியின் தோல்விகளை அனுபவிப்பதை விட உங்கள் அணியின் வெற்றிகளைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்துங்கள். மற்ற அணியின் தோல்வியைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. பாகிஸ்தான் தோற்றால், இந்தியாவில் உள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள், இந்தியா தோல்வியை சந்திக்கும் போது பாகிஸ்தானிலும் அப்படித்தான்.
இது மிகவும் எதிர்மறையான அணுகுமுறை. குறைந்தபட்சம் விளையாட்டிலாவது இந்த அணுகுமுறையை மாற்றுங்கள். மகிழ்ச்சியை உங்களது இடித்தில் கண்டு கொள்ளுங்கள், மற்றவர்களின் துக்கத்தில் கிடையாது. அதனால் என்ன பலன் கிடைக்கும்? ஒரு விளையாட்டு வீரர் இப்படி நினைக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் ஈர்ப்பு மற்றும் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக மக்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
சில மாதங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. உங்களுக்குத் தெரியாது. அவர்கள் இறுதிப் போட்டியிலும் களமிறங்கலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்றால் இந்தியாவில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கக் கூடாது. பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியா தங்கள் ஆட்டங்களில் ஏதேனும் தோல்வியடைந்தால் கொண்டாடுகிறார்கள். இரு அணிகளும் சமாளிக்க தங்கள் சொந்த சவால்கள் உள்ளன என்று கூறிஉள்ளார் கம்பீர்.



