அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடந்தது. இதில் முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வண்ணமாக இலங்கை அணியை அவர்களது நாட்டிலேயே வைத்து 50 ரங்களுக்குள் சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியானது உலக கோப்பை தொடருக்கு தயாராகும் அதே வேலையில் இந்திய அணியானது வரும் 22 லிருந்து 27 வரையில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுகிறது. அந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கான இந்திய அணி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.
இடஙக அணியில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியில் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே அதிக போட்டிகளில் விளையாடியதினால் ஒய்வு தேவைப்படுகிறது. அதே சமயம் அந்த அணியை கே.எல் ராகுல் வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா அணிக்கு திரும்புவதோடு சமீபத்தில் காயம் அடைந்த அக்சர் பட்டேலும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்தியில் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று அக்சர் பட்டேல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழக வீரர் அஸ்வினுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் ரோஹித் சர்மா சொன்னதை போல அஸ்வினுக்கு இன்னமும் உலக கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பு இருக்கிறது என்பதினால் இதில் சிறப்பாக செயல்படவேண்டிய காட்டாயத்தில் இருக்கிறார். அதோடு முதல் இரண்டு போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிப்பார் என்றும் மூன்றாவது போட்டியிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி
Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இதோ “1) கே.எல் ராகுல், 2) ரவீந்திர ஜடேஜா, 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) திலக் வர்மா, 8) இஷான் கிஷன், 9) ஷர்துல் தாகூர், 10) வாஷிங்டன் சுந்தர், 11) அஷ்வின், 12) பும்ரா, 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) பிரசித் கிருஷ்ணா
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஹார்டிக் பாண்டியா, 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) கே.எல் ராகுல், 8) இஷான் கிஷன், 9) ரவீந்திர ஜடேஜா, 10) ஷர்துல் தாகூர், 11) அக்சர் பட்டேல், 12) வாஷிங்டன் சுந்தர், 13) குல்தீப் யாதவ், 14) அஷ்வின், 15) பும்ரா, 16) முகமது ஷமி, 17) முகமது சிராஜ்.



