ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள் மழை காரணமாக தடைபட்ட நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த போட்டியானது தொடர்ந்த்து. மேலும் இந்த நாளில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.இதனால் இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு நடுவே மழை வந்து வந்து சென்றுகொண்டிருடஙகளும் அங்குள்ள மைதான பணியாட்கள் மிகவும் திறமையாக செயல்ப்ட்டு இந்த போட்டி நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா குறுகாயில் ” நாங்கள் இந்த போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்து விளையாட நினைத்தோம். ஏனெனில் எங்களுடைய நிறைய வீரர்களுக்கு போதிய அளவு விளையாட நேரம் கிடைக்கவில்லை. இன்று இந்த போட்டியில் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.

ஏனென்றால் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார் படுத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே அவர்களுக்கு எங்களுடைய அணி சார்பாக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் ரோஹித் சர்மா. பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்த காரணத்தினை இந்த மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனாலும் திறமையாக விளையாடிய கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து சிறப்பாக விளையாடினார்கள். அதே போன்று பும்ரா கடந்த 8 முதல் 10 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.



