அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.

அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. ஆனால் இந்தியா இங்கு செல்வதற்குள் பல தடைகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. குறிப்பாக மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏனென்றால் வரும் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. இதனால் அங்கே போட்டி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கு இடையே நிலவிவரும் அரசியல் பிரச்னை காரணமாக பாகிஸ்தானிற்கு சென்று இந்திய அணி விளையாட மறுத்தது. இந்த சர்ச்சை சில மாதம் நீண்டுகொண்டே போக பின்னர் இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து இந்த ஆசிய கோப்பை 2023 தொடரை நடத்துவது என்று முடிவெடுத்தனர். இதனால் இந்திய அணி விளையாடடும் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டது.
ஆனாலும் இந்த போட்டிகள் நடப்பதற்கு மழை பெரிய ஒரு குறுக்கீடாக இருந்தது. குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த இந்தியா vs பாகிஸ்தான் லீக் போட்டியில் ஒரு லீக் மட்டுமே நடந்தது. இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 தொடரில் பல போட்டிகள் மழை காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்தியில் இந்தியா இதனை சமாளித்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் நாளை இறுதி போட்டி நடக்க இருக்கும் நிலையில் அப்போது மழை பெய்தால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நாளை ஞாயற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில் ரிசர்வ் டே இருப்பதினால் திங்கள் கிழமையும் இந்த போட்டியானது நடைபெறும்.
இந்நிலையில் இந்த நாளிலும் இறுதி போட்டியானது நடக்காமல் சென்றது என்றால் இந்தியா அணிக்கு கோப்பை கிடைக்குமா என்றால் கிடையாது. அதே போல நடப்பு சாம்பியன் இலங்கை அணிக்கு கோப்பை கிடைக்குமா என்றால் அதுவும் கிடையாது. அப்படி போட்டி நடக்காமல் போக்குமாயின் கோப்பையை இரண்டு அணிகளுமே பகிர்ந்து வைத்துக்கொள்ளும். ஏனென்றால் இந்த வழக்கமானது முன்னரே நடந்துள்ளது குறிப்பிடதக்கது.



