சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவதினால் வெற்றி பெற்றே ஆகவேண்டிய அழுத்தமும் இருக்கிறது.

ஆனால் இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு பல சிக்கல்களும் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணியில் நுழைவதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இல்லத்தின் குறையை நம்மால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலே பார்க்க முடிந்தது.
இதனால் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்பட கூடாது என்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் பல விதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் தான் காயம் சரியாக பயிற்சியில் இருந்த பும்ராவிற்கு வரும் அயர்லாந்து தொடரில் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அவரின் செயல்படும் விதத்தை பொறுத்தே மேலும் இவருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து யோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் பும்ரா பற்றியும் அவர் விளையாட வில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளார் முகமது கைஃப்.

முகமது கைஃப் கூறியது :
இந்தியாவின் வெற்றியானது யார் காயத்தில் தற்போது இருக்கிறார் என்பதை பொறுத்து இருக்கிறது. உதாரணமாக பும்ரா ஒருவேலை மீண்டும் தன்னுடைய சிறந்த பர்மில் உலக கோப்பை அணியில் திரும்பினார் என்றால் அது போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் எவ்வளவு உடல் தகுதி இருக்கிறாரா என்பதை ஆசிய கோப்பையில் தெரிந்து கொள்வோம். அவர் தற்போது அயர்லாந்து செல்கிறார். அதனால் அவரது பந்துவீச்சைப் பார்க்கப் போகிறேன். பும்ரா முழு உடற்தகுதியுடன் வரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா வலுவான அணியாக இருக்கும்.
50 ஓவர்கள் போட்டி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஆஸ்திரேலியாவில் நாம் விளையாடியது டி20. ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. ஐசிசி போட்டிகளின் போது பாஸ்கிதான் அணிக்கு எதிராக திறமையாக விளையாடி பல சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா தன்னுடைய நல்ல வீரர்களை இழந்து பலமில்லாதது போல காட்சியளிக்கிறது.

இந்திய அணியில் நாம் கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற பல வீரர்களை இந்தியா மிஸ் செய்கிறது. இதில் முக்கியமான ஒருவர் பும்ரா. ஒருவேலை அவரலால் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வரமுடியவில்லை என்றால் இந்திய அணி கடுமையாக உழைக்க வேண்டும். நமக்கு இன்னும் பும்ரா தயாராக இருக்கிறாரா என்று தெரியவில்லை. பும்ரா விளையாட வில்லை என்றால் நாம் தோல்வியுடைய நேரிடும், நமக்கு உலக கோப்பை போட்டியில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்றார் முகமது கைஃப்.



