உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் நாளையில் இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டியலுக்கு முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தில் இருந்து வருகிறது.

அரை இறுதிப்போட்டியில் முதல் போட்டியில் இன்று இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் உள்ள மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை போட்டிகள் சிறப்பாகவே அமைந்தது. இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி ஒன்பது போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி என்றால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கும் ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியா அணியை வீழ்த்தி இருகின்றது.

ஆகையால் இந்த முறையில் நியூசிலாந்து அணி என்பதால் இந்திய ரசிகர்களுக்கு அச்சமாக தான் இருகின்றது. உலகக் கோப்பையின் இந்த வருட உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி பந்துவீச்சாளர்களும் வெற்றிக்கு சிறந்த உழைப்பு அளித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த உலகக்கோப்பை போட்டியில் முகமது சமி 5போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 153 ரன்களை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். இதற்க்கு முன்னதாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
அந்த போட்டியானது இந்தியாவில் நடைபெற்றதால் அது இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமைந்தது. இது குறித்து 2011 ஆம் ஆண்டு போட்டியில் விளையடிய சேவாக் கூறுகையில், இந்தியாவில் நீங்கள் நன்றாக விளையாட வேண்டும் எப்பொழுதும் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க கூடாது. ஆனால் நாக் அவுட் போட்டிகளை உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் 260 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தோம்.

எங்களுக்கு அந்த போட்டியில் கொஞ்சம் அதிஷ்டம் இருந்தது நன்றாக செயல்பட்டுகிறார் ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்தியன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிகமாக ரன்களையும் அடித்து வருகிறார் அவருக்கு கேப்டனாக இருப்பதால் இந்தியா அனைத்து நல்ல தொடக்கத்தில் அவரால் தர முடிகிறது. சுப்மான் கில்லை அவர் பயன்படுத்தும் மிக மிகவும் நன்றி இருக்கின்றது என்றும் அவர் கூறியிருந்தார்.



