உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் தற்போது 23 ஆட்டங்கள் முடிவடைந்து நிலையில் இந்திய அணி ஐந்து வெற்றிகளை பெற்று முதலிடத்திலிருந்து வருகிறது. 5 போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடத்திலிருந்து வருகிறது. இந்திய அணிக்கு கிட்ட தட்ட அரை இறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்று கூறலாம். இன்னும் ஒரு போட்டியை வென்றால் அது 100% உறுதியாகிவிடும்.

மேலும் பெரிய பெரிய அணிகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறிய அணிகள் தோற்கடித்து வருவதை நாம் கண்டு இருப்போம். அதேபோல் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தரையில் உள்ளது. மேலும் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் இந்திய அணி மோததுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது குறித்து கேள்வி இருந்து வருகிறது. இதுவரைக்கு பிசிசி தரப்பில் இருந்து ஒரு தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அது அவருடைய குதி காலில் ஏற்பட்டதால் அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறி விட்டார். அதன் பின்பு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ட அவருக்கு ஓய்வு தேவை என்று அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் முந்தைய போட்டியில் இந்திய அணியின் பயணம் மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி பங்கேற்பார் என்ற செய்தி ஒன்று பரவி வந்த அவர் இங்கிலாந்து அணியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ஹர்திக் பாண்டியா உடல்நலம் குறித்து கூறிய அவர் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் தான் இருக்கின்றார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை வைத்து ரிஸ்க் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனவே ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு பேட்டிங்கில் களமிறங்க வாய்ப்பு அவ்வளவு கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர் அணிக்கு ஒரு பவுலிங் ஆல்ரவுனராக தற்போது இருந்து வருகிறார் 4 போட்டிகளில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பலமாக இருந்து வருகிறார். மேலும் இந்திய அணி 29ஆம் தேதி லக்னோவில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது அதற்கு பின்பு தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியுடனும் விளையாட உள்ளது.



