தற்போது வேண்டுமானால் இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் போட்டியாகவும், ரசிகர்களால் கொண்டாடப்படும் பொடியாகவும் இருக்கலாம். ஆனால் 1983 ஆண்டுக்கு முன்னரெல்லாம் கிரிக்கெட் என்பது ஒரு போட்டியாக மட்டுமே தான் பார்க்கப்படும். இப்போது இருக்கும் வீரர்களை சச்சின், தோனி, சேவாக், விராட், ரோஹித் போன்று எந்த வீரரையும் ஒரு கதயநாகனாகவும், கடவுளாகவும் யாரும் அப்போது பார்க்கவில்லை.

இந்நிலையில் தான் பல தோல்விகளுக்கு பிறகு இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் 1983 உலக கோப்பையில் விளையாட சென்றது. ஆனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா என்று கேள்வியை கூட யாரும் கேட்கவில்லை, அதற்கு காரணம் அதற்கு முந்தய உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி மிகவும் மோசமாசா தோல்வியை சந்தித்தது. இதனால் நம்பிக்கை என்பது சிறிது கூட இல்லாத சூழ்நிலை தான் அப்போது 25 வயதாக கபில் தேவ் 1982 ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார்.
அப்படியொரு நிலையில் 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி உலகக்கோப்பையின் 60 ஓவர்கள் கொண்ட முதல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வேஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. வேஸ்ட் இண்டீஸ் சம்பியன்கள் என்பதினால் இந்தியாவை சாதாரணமாக வீழ்த்திவிடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் தான் கபில் தேவ் தலைமையினால இந்தியா அணி 2 முறை சாம்பியன் பட்டதை வாங்கிகொடுத்த க்ளீவ் லாய்ட்ஸ் தலைமையினால வெஸ்ட் இண்டீஸ் அணியை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிரும் வண்ணம் 54.1 ஓவர்களில் WI அணியை வீழ்த்தியது இந்தியா.

அந்த தருணம் கிரிக்கெட் உலகமே இந்தியாவை திரும்பி பார்த்தது. ஆனாலும் 1983 உலகக்கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடந்ததனால் 2வது முறை மோதிய வெஸ்ட் இண்டீன்ஸ் கவனமாக விளையாடி இந்தியாவை வீழ்த்தியது. ஆனால் அதற்கு பிறகு இந்தியா vs ஜிம்பாவே போட்டியில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்றது . இதில் தான் கபில் தேவும் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரான 175 ரன்களை விளாசினார். இதனையடித்து அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1983 இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த நேரத்தில் இந்திய அணியின் மீதும் கேப்டன் கபில் தேவ் மீது இந்தியாவில் உள்ள பல ரசிகரக்ளின் பார்வை இருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்று விடுமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது ஏனென்றால், அரையிறுதி போட்டியில் அந்த வருடத்திற்கு முன்னர் 2 முறை சாம்பியன் பட்டம் வெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி முன்றது கோப்பையை வெல்ல வந்தது. இதனால் அழுத்தம் என்பது இரண்டு அணிகளுமே இருந்தது.

இந்நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு செய்தது. மேலும் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை 54.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 183ரங்களுக்குள் சுருட்டியது. இதனால் வெற்றி பெறுவோம் என்ற என்ன கொஞ்சமும் இந்திய ரசிகர்களிடம் இல்லை. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 வது விக்கெட்டை 50 ரன்களின் போதுதான் இழந்தது.

எல்லாம் கைமீறி சென்று விட்டது என்றிருந்த நிலையில் தான் இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்கள். 2 வது விக்கெட்டுகளை பிறகு அற்புதமாக பந்துவீசிய மொஹிந்தர் அமர்நாத், மதன் லால் இருவரும் தல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பல்வேந்தர் சந்து 2 விக்கெட்டுகளையும், பின்னி மற்றும் கபில் தேவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பை வெற்றியை கொண்டியது 40 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்..




