உலக கோப்பை 2023 தொடரானது தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் நிலைப்பாடு தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னதாக இந்திய அணி இந்த போட்டியில் அரையிறுதி போட்டிக்கு செல்லுமா என்பதே சந்தேகம் என்றும் ரோஹித் சர்மா காலம் முடிந்து விட்டதாகவும் விமர்சனம் செய்து வந்தனர். ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டினாலும் சரி உலக கோப்பை போட்டியின் முதல் போட்டியாக இருந்தாலும் சரி ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிலும் உலக கோப்பை போட்டியின் முதல் போட்டியிலேயே இந்திய அணியின் கேப்டன் டக் அவுட் ஆனார். இதனால் ரோஹித் சர்மாவை பலரும் விமர்சித்தனர். ஆனால் இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அணைத்து விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித். மேலும் இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்தி மூன்று போட்டியில் தொடந்து வெற்றியை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் தான் ரோஹித் சர்மாவின் கேப்டன் குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பேசுகையில் “ரோஹித் சர்மா பேக்ஃபுட் பஞ்சில் பவுண்டரி அடிப்பது மிகவும் அற்புதமானது. இது அவருடைய டைமிங். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் டெலிவரிகளை விட்டுச் செல்லும் விதத்தை வைத்து அவர் வலைகளில் அலட்சியமாக வந்து விளையாடுகிறார் என்று அர்த்தம் கிடையாது. ஆனால் அவர் பெரிய ஷாட்களை விளையாடுகிறார்.

அவர் பயிற்சியில் முழு நம்பிக்கையுடன் செல்கிறார், ஆனால் இன்னும் மதிக்கப்பட வேண்டிய பந்துகளை மதித்து சரியாக விளையாடுகிறார். ஆனால் ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் அனைத்து கேப்டன்களிலும் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றினார். இது உலக கோப்பை போட்டியில் எளிதான காரியம் கிடையாது.
அவர் தோளில் ஏற்றிய பொறுப்பைக் கருத்தில் கொண்டு பாராட்டுக்கு உரியவர் என்பதால் அவரைப் பாராட்டுவதில் நாம் சோர்வடைய மாட்டோம். அவர் ஷாட்களை மிகவும் எளிமையாக விளையாடுகிறார். பயிற்சியின் போது தற்காப்பு மற்றும் பெரிய ஷாட்களை ரோஹித் சர்மா ஆடுப்பதை நீங்கள் காணலாம். ஆனால் அவர் போட்டியில் தாக்குதல் அணுகுமுறையை வைத்திருப்பார்.

பயிற்சியில் நீங்கள் பார்த்த அனைத்து பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களும் பயிற்சியின் போது மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள், நானும் அவர்களை மைதானத்தில் பார்த்தேன். பாகிஸ்தான் போட்டிக்கு முன் அரை மணி நேரம் அவர்கள் நிதானமாக ஃபுட் வாலிபால் விளையாடினர் என்று இந்திய அணி குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார் பதான். இந்நிலையில் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா அணி வெற்றி பெற்று 4 தொடர் வெற்றிகளை பெரும் என்று எதிபார்க்கப்படுகிறது.



