போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதனால் பலரும் இந்திய அணியின் இந்த பர்மிற்கு விமர்சனம் செய்தார்கள்.

இந்நிலையில் மூன்றவது டெஸ்ட் போட்டியானது பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று அவர்களுக்கு பின்னர் தான் தெரிய வந்தது. ஏனென்றால் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்.
குறிப்பாக இஷான் கிஷான் 77(64) ரன்களை விளாசினார், மேலும் அதற்கு முந்த போட்டியில் இஷான் கிஷான் 55(55) ரன்களை விளாசினார். இப்படிப்பட்ட நிலையில் தான் இஷான் கிஷான் பேட்டிங் குறித்தும் அவர் இனி என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான வாசிம் ஜாபர்.

அவர் பேசுகையில் “மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்ததில் இருந்தே இஷான் கிஷான் ஒரு நல்ல தொடக்க வீரராக வருவார் என்பதை கூறலாம். மேலும் இஷான் கிஷானை இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் பயன்படுத்தி கொள்ளலாம். அவருக்கு கிடைத்த வைப்பது இஷான் கிஷான் சரியாக பயன்படுத்தி கொண்டார். ஆனால் அவர் எடுத்த விக்கெட்டுகளை பெரிய ரன்களாக மாற்றி சதம் அடித்ததால் தான் அவரால் நிலைத்து நிற்க முடியும்.

அந்த விஷயம் தான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தேவைப்படுகிறது. அதனை விராட் மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் இருந்த இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் இஷான் கிஷான். இந்நிலையில் இஷான் கிஷான் மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு, பேசிய அவர் கூறுகையில் “நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதற்கு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் எனவும், இனி வரும் தொடரில் இருந்து தனது தொடக்கத்தை மாற்ற தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்
அவர் கூறியதாவது “நான் கொடுத்த ஃபினிஷிங்கில் அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. செட் ஆன பிறகு நான் பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும். என் சீனியர்கள் என்னிடம் சொன்னது இதுதான், நான் நின்று பின்னர் நடுவில் செட் ஆகி பெரிய ஸ்கோர் அடிக்க விடும். இந்த நேரத்தில் அது மிகவும் முக்கியமானது. எனவே கடைசி ஆட்டத்தை மறந்துவிட்டு 0-ல் இருந்து தொடங்குவது முக்கியம் என்று கிஷன் போட்டிக்கு பிறகு கூறினார்.




