இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 3 வகையான உலக கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. மேலும் இதில் முக்கியமான ஓன்று என்னவென்றால் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தது தான். அப்படிப்பட்ட நிலையில் தான் இப்போது இருக்கும் இந்தியாவின் பந்துவீச்சாளர்களை உருவாக்கி கொடுத்தது தோனிதான் என்று கூறியுள்ளார் இஷாந்த் சர்மா.
இது குறித்து அவர் பேசுகையில் “விராட் கேப்டனாக இருந்தபோது சில பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்றனர். ஆனால் கோலிக்கு பந்துவீச்சாளர்களை உருவாக்கி கொடுத்தது தோனி தான் என்று கூறலாம். ஏனென்றால் தோனியின் கீழ் நாங்கள் விளையாடும் போது, நாங்கள் ஒரு மாறுதல் கட்டத்தில் இருந்தோம். அப்போது ஷமியும் உமேஷும் புதியவர்கள், நான் மட்டும்தான் இருந்தேன். மற்ற அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள்.

புவனேஷ்வர் குமாரும் புதிதாக இருந்தார். ஆனால் அங்கே ஒரு தொடர்பாளராக இருந்த தோனிக்கு நிகர் அவரே. தோனி செய்தது என்னவென்றால் பந்து வீச்சாளர்களை சீர் செய்து விராட் கோலியிடம் விட்டுக் கொடுத்ததுதான். ஷமி மற்றும் உமேஷ், காலப்போக்கில், வெவ்வேறு பந்துவீச்சாளர்களாக மாறினர், பின்னர், ஜஸ்பிரிட் உள்ளே வந்தார். எனவே விராட் கோலிக்கு ஒரு முழுமையான தொகுப்பு கிடைத்தது.
அவர் செய்த சிறந்த விஷயம் ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும் அடையாளம் கண்டு, ஒருவருடன் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசி, பிறகு அவர்களை அப்படியே விடுவதுதான். முதலில் அவர் ஆக்ரோஷமாக இருந்தார். நீங்கள் புதிய பந்தில் பந்துவீசினால், நீங்கள் இரண்டு விக்கெட்டுகளை எடுக்கும் வரை ஐந்து ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ரோலை கொடுத்தார்.

விராட் கோலி என்னிடம், “நீங்கள் போதுமான போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள். இது நீங்கள் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நேரம் என்று கூறுவார். அதே போல ஷமியிடம் சென்று, ‘நீங்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது நீங்கள் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்றும் பும்ராவிடம் சென்று இது உங்கள் அறிமுகம் தான் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலைத்தன்மை மிக முக்கியமானது என ஒவ்வொருவருக்கு தனித்தனியாக திட்டங்களை வகுத்தார் விராட் கோலி என்றார் இஷான் சர்மா



