உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.
அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியா அணி சுலபமாக சென்றது. இந்நிலையில் இந்த போட்டியுடன் இந்தியா மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பாடு வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிலையில் பின்னர் மீண்டு வந்து தற்போது அற்புதமான பர்மில் பந்துவீசி வருகிறார்.
குறிப்பாக அவரது பந்துவீச்சும் ஸ்டைல் மாறி இருக்கிறது. முன்னர் கொஞ்சமாக ஓடிவந்து பந்துவீசிய அவர் தற்போது கொஞ்சம் தூரமாக இருந்து ஓடிவந்து பந்துவீசுகிறார். இதனால் அவரால் தன்னுடைய தோளில் மீதான அழுத்தத்தை கொஞ்சம் குறைக்க முடிகிறது, அதே நேரத்தில் பணத்தையும் வேகமாக வீச முடிகிறது.
View this post on Instagram
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2023 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை மோதலின் போது, இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டைப் போலவே தனது நெற்றியில் விரலை வைத்து விக்கெட் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் தற்போது போட்டி முடிந்ததும் கொண்டா முடியாமல் களைப்பாக இருக்கிறோம் என்றார் பும்ரா.

அவர் கூறுகையில் “நான் செய்தல் அது வைரலாக்கும் அல்லது எல்லா இடங்களிலும் பரப்பும் எண்ணம் எனக்கு இல்லை. அது நான் விக்கெட் எடுத்த போது என் நினைவுக்கு வந்தது. ராஷ்ஃபோர்டும் அதைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். மற்றபடி எந்த பின்னணியும் கிடையாது, எனக்கு அப்போது தோன்றியதை செய்தேன் என்று கூறினார்/
மேலும் பேசிய “போட்டியானது நன்றாக இருந்தது. நீங்கள் விரைவில் விக்கெட்டை பகுப்பாய்வு செய்ய வேண்டும். விக்கெட் மெதுவாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம், எனவே கடினமான லெந்தில் பந்துகளை வீச வேண்டும் என்று நாங்கள் அறிந்தோம். பேட்டர்களுக்கு முடிந்தவரை எங்களது பந்துவீச்சை கடினமாக்க முயற்சித்தோம்.
நான் இளமையாக இருந்த பொது பலவிதமான கேள்விகள் என்னுடைய மனதில் எழுந்தது. அது ஏனக்கு போட்டி குறித்த நுட்பத்தை கண்டறிய எனக்கு முயற்சி செய்தது. நான் விக்கெட்டை படித்து பலவுதமான நுட்பத்தை பயன்படுத்த விரும்புகிறேன் என்றார் பும்ரா.




