ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா கடந்த ஒரு ஆண்டு காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். 26 வயதாகும் பும்ரா கடந்த 2016 முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.

வர 60 சர்வதேச டி20 போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டெஸ்ட் போட்டிகள் என விளையாடி அதில் மொத்தமாக 319 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக கந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு முதுகில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்க்க விளையாடாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்ல குணமாகி இருக்கிறார்.
மேலும் வரும் உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதில் அவர் செயல்பாட்டை பார்த்து விட்டுத்தான் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும் ரோஹித் ஷர்மா கூட பும்ரா விரைவில் வந்தாலே நன்றாக இருக்கும் என்றும் ஆனால் அவரை அப்படியே அணியில் சேர்த்து கொள்ள முடியாது என்றும், அவர் சோதனை போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினால். இந்நிலையில் பும்ராவை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில் தான் பும்ரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பயிற்சி எடுக்கும் விடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
வீடியோ :
மேலும் அந்த வீடியோவில் பும்ரா பின் பாடலாக “நன் மீண்டும் வீட்டிற்கு வருகிறேன், உலகிற்கு சொல்லுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அதோடு இடஙக பதிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கமும் “இந்தியா அணிக்கு உங்களை மீண்டும் பார்க்க காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளது. மேலும் பல பிரபலங்களும் பும்ராவின் கம்பேக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பம்ராவை பற்றி பேசுகையில், என்.சி.ஏவில் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதால் ஸ்பீட்ஸ்டர் 2022 இல் ஆசியா கோப்பையிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I க்காக பம்ரா சேர்க்கப்பட்டார். இருப்பினும், மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடரில் அவர் கடைசி இரண்டு டி 20 ஐ விளையாடினார், இருப்பினும், தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து பும்ரா காயம் காரணமாக நிராகரிக்கப்பட்டர்.
மேலும், அவர் டி 20 உலகக் கோப்பை 2022, இலங்கைக்கு எதிரான ODI கள், பார்டர்-கவாஸ்கர் டிராபி, ஐபிஎல் மற்றும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியைத் தவறவிட்டார். நியூசிலாந்தில் தனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பும்ரா என்.சி.ஏ.யில் தன்னை மீண்டும் மீட்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது.




