ஆசிய கோப்பை தொடரில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு அசதியுள்ளது இந்தியா. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா.

இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மோசமாக விளையாடியது என்றே சொல்லலாம். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். இதனால் இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இந்த சுலபமான ஸ்கொரை எதிர்த்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் கொஞ்சம் மோசமாகவே பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் விளையாடியது. அது பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

அப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் கம்ரான் அக்மல். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் ” ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உலகக் கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த நினைக்கும் நீங்கள் இப்படி விளையாடினால் உங்களால் நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது.
இது போன்ற சூழ்நிலைகளில் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் என்ன செய்கிறது? யார் டாஸ் வென்று முதலில் பந்து வீச சொன்னது? வெற்றி பெற விட்டாலும் குறைந்தபட்சம் கடைசி வரை களத்தில் இருக்குமாறு வீரர்களிடம் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களுடைய பேட்டிங்கால் அணியின் ரன் ரேட் என்பது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்துக்கு எதிராக நீங்கள் வெறும் 190 ரன்களையே 40 ஓவர்களில் சேசிங் செய்தீர்கள்.
கஅந்த போட்டியில் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டாகிய விதம் என்பது மிகவும் மோசமாக இருந்தது. அவர்களை குறைந்தபட்சம் 50 ஓவர்கள் விளையாடி 260 – 280 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். தற்போது அவர்கள் பாகிஸ்தான் வாரியம் கேள்வி கேட்காது என்ற நினைப்பில் எந்த திட்டமும் இல்லாமல் விளையாடுகின்றனர். என்னை கேட்டால் இந்தியா போன்ற அணிக்கு எதிராக பள்ளியில் பயிலும் மாணவர்கள் போல மோசமாக செயல்பட்டீர்கள் என்று விமர்சித்துள்ளார் கம்ரான் அக்மல்.



