உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒரு அணியாக திகழ்வது இந்தியா. ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வெல்ல முடியவில்லை, பல முறை இறுதி போட்டி மற்றும் எலிமினேடர் வரையில் சென்றாலும் அப்போது சிறப்பாக விளையாட வேண்டிய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 2019 ஆம் ஆட்டின் உலக கோப்பை போட்டியிலும் கூட இப்படித்தான் நடந்தது.

அதில் ரோஹித் ஷர்மா , கேஎல் ராகுல், விராட் என மூவரும் 1 ரன் மட்டுமே எடுத்தனர். அதற்கு பிறகு வந்த தோனி மற்றும் ஜடேஜா ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் அவர்களினால் வெல்ல முடியவில்லை. இது போன்று சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் நடந்தது. இந்த போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரக்கல் பெரிதாக விளையாடாமல் இருக்க ரஹானே மற்றும் ஜடேயா விளையாடியும் வெற்றி பெற முடியவில்லை.
மேலும் இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் தன்னுடைய யாரும் இப்போதெல்லாம் அறிவுரை கேட்க வருவதே இல்லை என்று வருந்தி பேசியிருந்தார். இபப்டிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “தற்போதுள்ள வீரர்களிடம் இருக்கும் நல்ல விஷயம் தேவையான அளவு தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் எதிர்மறையான விஷயம் என்னவெனில் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நினைக்கிறார்கள். இதை எவ்வாறு நான் சிறந்த முறையில் சொல்வது என்றும் எனக்கு தெரியவில்லை. தற்போதுள்ள வீரர்கள் நல்ல தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் அதற்காக யாரிடமும் எதைப் பற்றியும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஆனால் எங்களைப் போன்ற அனுபவமிக்க வீரர்களால் அவர்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சில நேரங்களில் அதிகப்படியான பணம் வந்தால் திமிரும் வந்து விடும். அதனால் இப்போதுள்ள தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நினைத்து கொள்கின்றனர். அதுவே அப்போதைக்கு இப்போதைக்கு வித்தியாசமாகும். தற்போதைய நிலைமையில் நிறைய வீரர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்றே நான் சொல்வேன்.

மேலும் பேசிய சுனில் கவாஸ்கரின் வேதனை குறித்ததும் பேசினார். அது போன்ற சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர் உதவ தயாராக இருக்கும் போது ஏன் நீங்கள் பேசுவதில்லை?அதில் என்ன ஈகோ இருக்கிறது?. அவர்கள் நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு அனைத்தையும் சாதிக்கக் கூடியவர்களாக இருக்கலாம் ஆனால் 50 சீசன்களில் விளையாடிய ஒருவர் உங்களுக்கு ஏதேனும் சிறிய விஷயங்களில் உதவ முடியும்.
குறிப்பாக ஒருவருடைய ஆலோசனையை கேட்கும் போது உங்களுடைய எண்ணங்கள் மாறலாம் என்றார் சுன்னில் கவாஸ்கர். இந்நிலையில் இதற்கு முன்னர் முன்னாள் இந்திய அணியின் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த விஷியத்தை சொல்லி வருந்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.




