ரோஹித் ஷர்மாவை போல் எண்ணி க்ளாசெனை வழி அனுப்பி வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மும்பை ரசிகர்கள். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நேற்றைய 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்கா அணியும் மும்ன்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் செய்ய விரும்பியது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் கிளாசென் 109 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும், ஜான்சன் 75 ரன்களையும் குவித்தனர்.
இங்கிலாந்து அணியின் பௌலிங்கை தென்னாபிரிக்கா அணி நான்கு பக்கமும் சிதற அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர் டாப்லி 3 விக்கெட்டுகளையும் கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் சொதப்பினர்.

400 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 1௦௦ ரன்கள் இருந்த நிலையிலே 8 விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணி 22 ஓவர் முடிவில் 1௦ விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் விதியசாரத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட் 45 ரன்களும், கஸ் அட்கின்சன் 35 ரன்களும் ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா இரண்டு விக்கெட்டுகளையும் ராபாடா மற்றும் மகாராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணியை சுருட்டினர்.
A packed Wankhede stadium gives a standing ovation to Heinrich Klaasen
— Mini⁴⁴⁴ (@cricminiindia) October 21, 2023
One of the best knocks in the World Cup#ENGvRSA #Proteas #Proteafire#CWC23 pic.twitter.com/Kb5IuHcQdP
இது போன்ற பெரிய அணி இது போன்ற மோசமான பேட்டிங் செய்து தோல்வியை தழுவியதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இங்க்லாந்து அணி இனி வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அதில் இந்திய போன்ற தோல்வியை தழுவாத அணியும் இருந்து வருகிறது. வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி என்ன செய்யப்போகும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த போட்டியில் க்ளாசென் சிறப்பாக விளையாடி 67 பந்துகளில் 109 ரன்களை குவித்து இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களையும் அடித்து இங்கிலாந்து அணியை சிதறடித்தனர். கிளாசென் அவுட்டாகி வெளிறிய போது அங்கு குவிந்து இருந்த மக்கள் அவரை ரோஹித் ஷர்மா போல் அவரை சிறப்பாக வழி அனுப்பி இருந்தனர். அந்த நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளக்கியது.



