அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முதல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதே தோல்வியை கொடுத்தது. அந்த நிலைமையில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் தான் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்ந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மா பார்ம் குறித்து பேசியுள்ளார். அவர் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டியில் “கேஎல் ராகுல் ஃபிட்டாக இல்லாமல் போகும் பட்சத்தில் கில்லுடன் இஷான் கிசான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர் பெரும்பாலும் ஓப்பனிங் இடத்தில் வெற்றிகரமாக விளையாடியுள்ளார்.
அதனால் ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக தன்னுடைய இடத்தை தியாகம் செய்து 4வது இடத்தில் விளையாடலாம். சொல்லப்போனால் புதிய பந்தில் ஸ்விங் செய்து நெருப்பாக பந்து வீசும் பாகிஸ்தான் அட்டாக்கிற்கு எதிராக ரோகித் சர்மா ஈசியாக அவுட்டாகி விடுவார் .எனவே இஷான் கிசான் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். காரணம் பாகிஸ்தான் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.
K Srikanth just bodied Rohit Sharma saying that he's is a free wicket 😭😭😭🤣 pic.twitter.com/jue0hES3wd
— B` (@Bishh04) August 29, 2023
அந்த பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு சமாளிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் நீங்கள் இசான் கிசானுக்கு கொடுக்க வேண்டும்/ மேலும் இடது – வலது கை ஓப்பனிங் கலவை ஜோடியை உருவாக்குவதற்காக நான் இசான் கிசானை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற தைரியமான முடிவை சொல்கிறேன் என்று மிகவும் வெளிப்படையாக குறியுளளார் ஸ்ரீகாந்த்.



