உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதற்க்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெறுவதினால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியடைந்தே ஆக வேண்டிய காட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக சொதப்பிவரும் இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெறுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

தோனியின் தலைமையிலான இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் ட்ராபியை வென்றது. அதற்கு பிறகு இந்தியாவினால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறும் நிலயில் அந்த நீண்ட கால இடைவெளியை மாற்றலாம். அதே நேரத்தில் இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனென்றால் தோனிக்கு பிறகு சிறப்பாக கீப்பிங் செய்துகொண்டிருந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நடந்த காரி விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டார். பல காலம் மருத்துவமனையில் செலவழித்த அவர் தற்போதுதான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இப்படிப்பட்ட இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் ரிஷப் பண்ட் இல்லாத நேரத்தில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக யார் சரியாக இருப்பர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் பேட்டி :
அவர் பேசுகையில் “நமக்கு ரிஷிப் பண்ட் குறித்தான உண்மையான தகவ்கல்கள் எது என்று தெரியவில்லை. அவர் ஒருவேளை தற்போது அணியில் விளையாடிக்கொண்டிருந்தால், நேரடியாகவே சொல்லி விடலாம் இந்தியாவிற்கு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று. இருந்த போதிலும் அவருக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யாருடைய உடற்தகுதி என்பது இப்போது கேள்விக்குறிதான். உலக கோபப்பிக்குள் அவர் எவ்வளவு உடற்தகுதியுடன் இருப்பர் என்று யாருக்குமே தெரியாது.

ஒருவேளை ரிஷப் பண்ட் வரும் உலக கோப்பை 2023 விளையாடினால் அவருடைய பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார் ஸ்ரீகாந்த். மேலும் இதனையடுத்து பேசிய ஸ்ரீகாந்த் ரிஷப் பண்டிற்கு சரியான மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் “இஷான் கிஷான் ஒருவேளை அணியில் நுழைந்தால் அவர் ஆபாத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார்.
இஷான் வெற்றிகரமான வீரராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கே.எல் ராகுல் போன்ற வீரர்களும் மிடில் ஆர்ட்டரில் காம்பேக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. நம்மிடம் சுப்மன் கில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற எல்லா போட்டியலிலும் திறமையாக செயல்படும் பேட்டார்கள் இருக்கின்றனர். அவர்களின் செயல்திறமும் பிரமாதமாக இருந்துள்ளது. எனவே இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்று தெரிவித்தார் ஸ்ரீகாந்த்.




