மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரங்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு இது சுலபமான போட்டியாக போகவே 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்தனர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்.
இவர் மூன்று ஓவர்களில் 2 ஓவர்கள் ரன்கள் எடுத்தும் கொடுக்கலாம் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தது 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் ” இந்த பிட்ச் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. முகேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை எடுத்து கொடுத்து எனக்கும் ஜடேஜாவிற்கும் நல்ல வழிதடத்தை அமைத்துக் கொடுத்தனர்.

நாங்கள் இருவரும் சரியான லென்த்தில் பந்துகளை வீசியதால் எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக நான் எனது சரியான ரிதத்தை பிடித்து பந்து வீசியதால் இந்த போட்டியில் விக்கெட் எடுக்க முடிந்தது. எங்களுடைய சார்பில் இருந்து 7 விக்கெட்களை சேர்ந்து எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் போன்ற ஒரு மூத்த வீரர் உங்களுடைன் இருக்கும்போது எனக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. அவர் கொடுக்கும் அறிவுரைகள் என்னை மேலும் சிறந்த ஒரு பந்துவீச்சாளராக மாற்றுகிறது. எங்கள் இருவருக்குமே ஒருவாய் ஒருவர் நன்றாக தெரியும் என்றார் குல்தீப் யாதவ்.
இந்நிலையில் உலக கோப்பை போட்டி 2023 நடக்க இருக்கும் நிலையில் தொடர்ந்து குல்தீப் யாதவ் இப்படியே சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.



