அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.

அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணியானது இந்தியாவுடன் மோதிய நிலையில் அசால்டாக இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா. இந்நிலையில் ஆசிய கோப்பையில் விளையாடிய வீரர்கள் 95 சதவிகிதம் உலக கோப்பையிலும் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த தொடரில் குல்தீப் யாதவ் மிகவும் திறமையாக பந்து வீசினார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்த இவர் தற்போது இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார். மேலும் வரும் உலக கோப்பை தொடரிலும் குல்தீப் யாதவ் இருக்கிறார். இந்த நிலையில் தான் ஆசிய கோப்பை 2023 தொடரின் வெற்றிக்கு பிறகு பேசிய குல்தீப் தன்னுடைய கடின உழைப்பு பற்றி பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருவதாக நினைக்கிறன். அதற்கு தேவையான கடின உழைப்பையும் கொடுத்து வருகிறேன். தற்போது மற்ற அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.
டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் மட்டுமே கவனத்தி வைத்து பந்துவீசுகிறேன். மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன்.
இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் என்னுடைய பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது. எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை எடுத்துக் கொடுத்தால் ஸ்பின்னர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது



