உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 40வது போட்டியை பூனேவில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. உலக கோப்பை 2023 லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களது நிலையை உறுதிப்படுத்தினர்.

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பு இருந்துவிட்ட நிலையிலும் தங்களது போட்டி அவர்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விளையாடி வருகின்றனர். என்னதான் இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் ஆக இருந்தாலும் இந்த உலக கோப்பை எட்டு போட்டியில் நேற்றைய போட்டி சேர்த்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி ஏழாவது இடத்தில் இருந்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அது அவர்களுக்கு நன்றாகவே கை கொடுக்க. 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 339 ரன்களை குவித்து இருந்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பென்ஸ் ஸ்டோக்ஸ் 108 ரன்களும் டேவிட் மலான் 87 ரன்கள் கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும் குவித்திருந்தனர். நெதர்லாந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று சுமாராகவே தான் இந்த போட்டியில் பந்து வீசி வந்தன. லீட் 3 விக்கெட்டுகளையும் ஆரியன் தட் மற்றும் பீக் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மீக்ரம் ஒருவிக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இங்கிலாந்து அணி 50 அவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்து இருந்தந்து.

340 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய நெதர்லாந்து அணி 37.2 அவர்களின் அனைத்து விக்கெட் களையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 41 ரன்களையும் எட்வர்ட் 38 ரன்களையும் வெஸ்லி பாரேசி 37 ரன்களை மட்டுமே குவித்திருந்தனர். மொயின் அலி மற்றும் ஆதில் ரஷித் தலா மூன்று விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி இரண்டு விக்கெட்டுகளையும் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர். எனவே நெதர்லாந்து அணி போட்டியில் தோல்வி தழுவி பத்தாவது இடத்தில் இருந்து வருகிறது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னால் பேசிய ஜாஸ் பட்லர் பாகிஸ்தான் எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. இந்த உலக கோப்பையை நாங்கள் சரியாக விளையாடவில்லை எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சரியான செயல்பாடு வெளிப்படுத்த வெற்றிகரமாக இந்தியாவை விட்டு வெளியேற நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தானை அணியும் ஒரு சிறந்த அணியாக தான் இருக்கின்றது. அவர்களுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை நாங்கள் எங்களிடம் இருந்தது பார்க்கின்றோம். நாம் அனைவரும் இன்று சிறப்பாக செய்துள்ள விஷயங்களில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை வெற்றி பெறலாம் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.




