அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
ஏனென்றால் காயங்களை சந்திக்காத வீரர்களுடன் ஃபிட்டாக இருக்கும் பாகிஸ்தான் அணி ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட வலுவான அணியாக திகழ்வதால் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்புள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்த விஷயம் குறித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில் “இந்தியா 3 சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட உள்ளது. ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகிய 3 தனித்துவமான பவுலர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தனித்துவமான திட்டங்கள் தேவைப்படுகிறது. முதலில் போட்டி நடைபெறும் கண்டி மைதானம் பவுன்ஸ்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹரிஷ் ரவூப் ஆஃப் ஸ்டம்ப்பின் டாப்பை அடிக்கும் அளவுக்கு சவாலை கொடுப்பார்.
அவரை போலவே இந்திய அணியின் வீராகள் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் அவர் ஆரம்ப கட்டத்திலேயே விக்கெட்களை எடுத்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் கேப்டன் ரோஹித் சர்மாவை அவர் அவுட்டாக்கிய பந்தை அவ்வளவு விரைவாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எனவே ஷாஹீன் அப்ரிடியின் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து முதல் 3 ஓவர்களை சிறப்பாக விளையாட பாருங்கள். அதே போல நசீம் ஷா பந்தை ஸ்விங் செய்து வீசும் அளவுக்கு திறமை கொண்டவர். அந்த வகையில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு நசீம் ஷா போன்றவரை இந்தியா அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக போட்டியில் நீங்கள் முன்னிலையில் இருப்பது போன்ற அழுத்தத்தை அவர்களுக்கு உண்டாக்குங்கள்”

இறுதியில் எது எப்படியிருந்தாலும் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்களிடம் க்ளாஸான மிகவும் ஆழமான பேட்டிங் வரிசை இருக்கிறது. அவர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதால் இந்த சவாலை சமாளிப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார் ஹெய்டன்.



