தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்தாலும் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐசிசி உலகக்கோப்பை வரும் ஆக்டொபர் மாதம் தொடங்க உள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் தவிர்த்து 50 ஓவர் உலககோப்பை என்பது ஒரு அணியின் வீரர்களை கடுமையாக சோதிக்கும். ஒரு சிறிய தவறு முழு போட்டியையும் பாதிக்கும் என்பதினால் இதுவே உலக கிரிக்கெட் முதன்மையானதாக கருதப்படுகிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான் வரும் ஆக்டோபர் மாதம் இந்தியாவில் இந்த உலகக்கோப்பை நடைபெறுவதினால் சொந்த மண்ணில் வெற்றி அடைத்தே ஆக வேண்டும் என்ற ஒரு ஆசை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தோனியின் தலைமையிலான இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்ற பிறகு தோல்வியை தழுவிய நிலையில் இந்த வருடம் நடக்கும் உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் தான் ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதவது “ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து இதுவரை உலகக் கோப்பை வரலாற்றின் ஃபைனல்களில் தோற்காமல் இருக்கும் வெற்றி நடையை ஆஸ்திரேலியா தொடரும். என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியா இறுதி போட்டியில் 450/2 ரன்கள் அடித்து இந்தியாவை 65 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யும் என்று கூறினார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததை தவிர்த்து போட்டிகளில் அசத்திய கங்குலி தலைமையிலான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அந்த இறுதிப்போட்டியில் கேப்டன் பாண்டிங்140 கில்கிறிஸ்ட் 57, ஹெய்டன் 37 என ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 359/2 ரன்கள் குவித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே போராடி கொடுக்கும் வகையில் சச்சின் 4 ரன்களில் அவுட்டாக வீரேந்திர சேவாக் மட்டுமே அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ரன் அவுட்டானதால் இறுதியில் டிராவிட் 47 ரன்கள் எடுத்தும் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இந்தியா. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவை வரும் உலக கோப்பையிலும் வெல்வோம் என்று மிட்சேல் மார்ஷ் கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




