கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது.இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் கேஎல் ராகுல் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. அதனால் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது சோதனைகளை செய்வது போன்றவற்றால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் தோற்கடிக்கும் என அந்நாட்டை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் சவால் விட்டு வருகிறார்கள்.

அதை விட தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் அப்ரிடி 2021 டி20 உலகக் கோப்பை போல இந்திய டாப் ஆர்டரில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களான ரோகித், கில், விராட் கோலி ஆகியோரை தெறிக்க விட்டு பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கணித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இந்தியாவின் நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை எதிர்கொள்வதற்கு தடுமாறுவார் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் “முகமது ஷமி சிறப்பான பவுலர். அவருடைய ஃபார்ம் தற்போது நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக சமீப காலங்களில் பும்ரா இல்லாத போதிலும் அவர் சிறப்பாகவே பந்து வீசினார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவருடைய ஃபார்ம் சிறப்பாக இருந்தது. எனவே நிறைய திறமைகளை கொண்டுள்ள அவரை எதிர்கொள்வதற்கு பாபர் அசாம் மிகவும் அதிகமாக சிரமப்படுவார் என்பது என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.
முகமது கைப் கூறுவது போல கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி வரும் ஷமி 2019 உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். எனவே தம்முடைய அனுபவம் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றால் பாகிஸ்தான் கேப்டனுக்கு அவர் மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.




