இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் அனைவரும் கூறுவார்கள். ஏனென்றால் மகேந்திர சிங் தோனி இதுவரையில் ஒரு கேப்டனாக செய்த சாதனைகள் பல. முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி வெல்வது என்பது ஒரு சிறந்த தலைவன் வழிநடித்தினால் மட்டுமே முடியும்.

அதே போன்று எந்த அழுத்தமான சூழ்நிலை இருந்தாலும் சரி அதனை அமைதியாக கையாண்டு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். இதனால் தோனிக்கு கேப்டன் கூல் என்ற பட்டபெயரும் உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி 5 முறை கோப்பைகளையும் வென்று கொடுத்திருகிறார்.இப்படி பல சாதனைகளை படைத்த இவரை பற்றி வெளிநாட்டு வீரர்கள் யாரை கேட்டாலும் தோனி என்று கூறும் நிலையில் இந்தியாவில் அது வேறுபட்டு கங்குலி தான் சிறந்த கேட்டன் என்பார்கள்.
கங்குலி மற்றும் ட்ராவிட் :
ஏனென்றால் என்னதான் தோனி இந்திய அணி வீரர்களை வழிநடத்தி கோப்பைகளை வென்றாலும். அந்த வீரர்கள் வந்ததற்கு காரணமாக பார்க்கப்படுவது.முன்னாள் இந்திய அணியின் வீரராக கங்குலி மற்றும் ட்ராவிட் தான். கங்குலி தான் இளம் வீரர்களை கொண்ட அணியை மிகவும் நம்பினார் மேலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்ற அப்போதைய இளம் வீரர்களுக்கு ஆதரவளித்த கேப்டனும் கங்குலிதான்.

மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய அணிய சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய நிலையில் அப்போதைய கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் மற்றும் துணை கேப்டன் ஜடேஜாவிற்கு வாழ்நாள் முழுவதும் தடை விதித்தார்கள்.அப்படி மோசமான நிலைமையில் இருந்த இந்திய அணியை மெருகேற்று பின்னர் 2003ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி வரையில் கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய விஷயம். இதனாலேயே இந்தியாவின் மிகசிறந்த கேப்டன் பட்டியலில் உயரத்தில் கங்குலியின் பெயர் எப்போதுமே இருக்கும்.

முகமது கைஃப் கூறியது :
பொதுவாக தோனி மற்றும் கங்குலியின் பிறந்தநாள் அடுத்தடுத்து வருவதினால் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் இப்போதுமே எழும்.அந்த வகையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் யார் சிறந்த கேட்டன் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது “இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால் நான் சௌரவ் கங்குலியைத்தான் கூறுவேன்.ஏனென்றால் நான் சென்று என்னுடைய சிறந்தததை கொடுக்க வேண்டும் என்று எப்போதுமே கூறுவார். எனக்கு எப்போதுமே அவர் ஆதரவாக இருந்துள்ளார், அவை அனைத்தும் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது.
ஒரு இளம் கிரிக்கெட் வீரராக நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும் போது அவர் கேப்டனாக இருந்தால் தைரியமாக விளையாடுவீர்கள் என்றார் முகமது கைஃப். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஆக்கிரோஷமான வீரராக விராட் கோலி இருந்தாலும் அப்போதே இந்த விகியங்களை செய்த்தவர்கள் ட்ராவிட் மற்றும் கங்குலி என்பதை யாரும் அவ்வளவு விரைவில் மறந்து விட முடியாது என்பது குறிப்பிடதக்கது.




