அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அணியின் அனைத்து வீரர்களின் பங்களிப்பும் தேவைப்பட்டாலும் சில வீரர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலான வீரர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இந்திய அணியின் விராட் கோலியை சொல்லலாம். ஏனென்றால் சிக்ஸர் அடித்து ரன்களை சேர்ப்பார் மத்தியில் தரையோடு தரையாகவே அவ்வளவு ஸ்கொராக இருந்தாலும் எதிரணிக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் அச்சுறுத்தலை கொடுத்து வெற்றியடைய வைத்திருக்கிறார்.
குறிப்பாக 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களாக அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 275 போட்டிகளில் 12898 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக தம்முடைய குருவான சச்சினையே மிஞ்சி அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “உலகக் கோப்பையில் அவர் கொண்டிருந்த ஃபார்ம், ஆசிய கோப்பையில் (2022) அவர் ஆடிய ஆட்டத்தில் இருந்தும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த அந்த சதத்தில் இருந்தும் என்று கூறலாம். அதற்கு முன்பு அவர் ரன் எடுக்க கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனால் ஆசிய கோப்பையில் அவரது செயல்பாடுகளுக்குப் பிறகு, அவர் தன்னுடைய ஆட்டத்தின் போக்கை நிறுத்தவில்லை. அவர் போட்டிகளில் வென்றார். அவுஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக, கோஹ்லி சிறப்பாக விளையாடினார்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். முழுப் பொறுப்பையும் ஏற்று தான் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்தார். எனவே கோலியைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பார்கள், அவர் எவ்வளவு பெரிய விக்கெட் என்று அறிவார்கள். அவரை வெளியேற்றினால், போட்டி மிகவும் எளிதாகிவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் இருக்கும் ஃபார்ம் மற்றும் அழுத்தம் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும்.

டி20 உலகக் கோப்பையின் கடைசிப் போட்டியில் அவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடன் விளையாடியிருப்பதால், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி அல்லது ஹாரிஸ் ரவுஃப் போன்ற ஒவ்வொரு பாகிஸ்தான் பந்துவீச்சாளரும் எப்படிப் பந்து வீசுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். கோலி அவர்களை எப்படி விளையாடுவது என்பது தெரியும். அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அவர் அறிவார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி மிகவும் ஆபத்தானவராக இருப்பார் என்று முகமது கைஃப் கூறினார்.



