உலக கோப்பை 2023 தொடரில் நேற்று நடந்த போட்டியின் போது நடப்பது சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை எடுத்த நிலையில் அதனை துரத்திய இங்கிலாந்து மிகவும் மோசமான விளையாடி 215 ரன்களுக்குள் சுருண்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது மேலும் இங்கிலாந்து அணி அந்த போட்டியில் மட்டுமே 8 விக்கெட்டுகளை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளது.

இதனால் இங்கிலாந்து அணி மீது பலரும் கடுமையான விமர்சங்களை குறி வருகின்றனர். மேலும் இந்த நிலைமை இப்படியே தொடருமாயின் இந்த உலக கோப்பை போட்டியில் அரையிறுதி போட்டிக்கே இங்கிலாந்து அணியால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த நிலையில் அடுத்ததாக பலமாக இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து எதிகொள்ள இருக்கும் நேரத்தில் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் நாசர் ஹுசைன் கருத்து கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “ஜோஸ் பட்லரின் அணிக்கு இப்போது ஓய்வெடுக்க இடம் கிடையாது. அவர்கள் தங்கள் பட்டத்தின் பாதுகாத்து தங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் இங்கிருந்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதாவது அவர்கள் தங்களது சிறந்த XI வீரர்களை கொண்டு மும்பையில் சனிக்கிழமையன்று ஃபார்மில் உள்ள தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது முதல் ஒவ்வொரு ஆட்டமும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பது போல் செயல்பட வேண்டும்.

அதாவது பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியுடன் இருந்தால் மீண்டும் வர வேண்டும். ‘இது ஆப்கானிஸ்தான் என்பதினால் மட்டுமே அவர் விளையாடாமல் இருந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஸ்டோக்ஸ் நினைவுகூருவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஹாரி புரூக்கில் அவருக்குப் பதிலாக ஒதுக்கப்பட்டவர். நன்றாகவும் விளையாடுகிறார். நானாக இருந்தால் அவர்கள் இருவரையும் அணியில் வைத்து விளையாடுவேன்.
மேலும் கிறிஸ் வோக்ஸ் பற்றி பேசிய அவர் கூறுகையில் “ஆவர் முற்றிலும் நிக்கிலிருந்து வெளியேறவில்லை. இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது. அவர் மிகவும் இயல்பாக இல்லை. இங்கிலாந்து அவரை இப்போது வெளியேற்ற வேண்டும். இப்போது எந்த வித உணர்ச்சிக்கும் விசுவாசத்திற்கும் நேரம் இல்லை.

துணைக்கண்ட சூழ்நிலையில் இங்கிலாந்து பெரிதும் போராடி வருவதாகவும் ஹுசைன் கூறிய அவர் மேலும் பேசுகையில் “இந்த இங்கிலாந்து அணி, குறிப்பாக துணைக் கண்ட சூழ்நிலைகளில் பாதிக்கப்படக்கூடியதாகத் தெரிகிறது. எனது போட்டிக்கு முந்தைய கணிப்புகளில் ஒன்று, இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் தோல்வியை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை எண்டுற கூறியிருக்கிறார் நாசர் ஹுசைன்.



