இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர்கள் இருவரும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்கள்.

இதனையடுத்து கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கேஎல் ராகுலும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் கேஎல் ராகுல் உடல் தகுதி பெற்று வந்தாலும் அவருக்கு போட்டியாக இஷான் கிஷான், சூரிய குமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருக்கின்றார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரானது மழை காரணமாக இந்தியா 1-0 வென்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
A look at our Playing XI for the 1st ODI against West Indies.
— BCCI (@BCCI) July 27, 2023
Live – https://t.co/lFIEPnpOrO…… #WIvIND pic.twitter.com/xTjWtwcshQ
ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை பெரிதாக வாய்ப்பு என்பது வழங்கப்பட வில்லை. இருப்பினும் விடா முயற்சியுடன் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சஞ்சு சாம்சன் 2022 அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று சிறப்பாகவே செயல்பட்டார்.

அதன் காரணமாக ஒரு வழியாக நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் ஜனவரி, பிப்ரவரியில் சொந்த மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள்.

இருந்த போதிலும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஆடிவரும் இந்திய அணியில் விராட், ரோஹித், பாண்டியா, சுப்மன், சூரிய குமார் யாதவ் என பல வீரர்கள் வலது கை வீரர்கள் என்பதினால் அணியில் இடது கை வீரருக்காக இஷான் கிஷான் தேர்ந்தெடுக்க பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் சஞ்சு சாம்சனுக்கு இப்படியே வாய்ப்புகள் மறுக்கப்படுவது ரசிகர்களினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.




