அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியானது மிகவும் முக்கியமானது ஏனென்றால் இதில் வெற்றி பெருவபர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மழை காரணமாக பல போட்டிகளானது பாதிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியும் மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இனிலுயில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 42 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. இதனையடுத்து 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 42 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்து ஆசிய கோப்பை பைனலுக்கு சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியது. இது பலருக்கும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிற்காடு பேசிய பாஸ்கிதான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த போட்டியில் தோல்வியுற்றது குறித்து பேசினார்.
அவர் கூறுகையில் “கடைசி கட்டத்தில் நாங்கள் எங்களது அணியின் பெஸ்ட் பவுலர்களுடன்வைத்து விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் ஷாகின் அப்ரிடி 41-வது ஓவரை வீசவைத்துவிட்டு இறுதி ஓரை ஜமான் கானிடம் வீச சொன்னாம். ஏனென்றால் ஜமான் கான் இறுதி ஓரை சிறப்பாக வீசுவார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. ஆனால் இலங்கை அணி எங்களது திட்டங்களை சிறப்பாக எதிர்கொண்டு விட்டார்கள்.

இந்த போட்டியில் எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். அதனால் தான் இந்த போட்டியில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் பவுலிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் எங்களது தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை. அதேபோன்று இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது பாட்னர்ஷிப் நாங்கள் தோற்க காரணமாக இருந்தது. இறுதிவரை நாங்கள் போராடினோம் என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.




