இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோற்றத்து தான் எங்கள் ரிதத்தை பாதித்தது என்று பகார் ஜமான் கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 31வது பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. புள்ளி பட்டியல் பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணி கடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வி தழுவியும் பங்களாதேஷ் அணி கடந்த 5 போட்டிகளிலும் தோல்வி தழுவி வருகிறது.
பாகிஸ்தான் அணி மீதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதும் பல்வேறு புகார்கள் தற்பொழுது எழுந்து வருகின்றது. அதில் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானனை வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் செல்லுமா என்பது கேள்விக்குறியே?
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்களில் பாகிஸ்தான் அணியிடம் சுருண்டது. பங்களாதேஷ் அதிகபட்சமாக முகமதுல்லா 56 ரன்கள் லிட்டன் தாஸ் 45 ரன்கள் கேப்டன் ஷாகிப் உல் ஹாசன் 43 ரன்கள் குறித்து இருந்தனர்.

அதன்பின் வந்த மிராசை தவிர அனைத்து வீரர்களும் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு எண்களிலே ஆட்டம் இழந்து வெளியேறி பங்களாதேஷ் அணிக்கு பெரும் சோகத்தை அளித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளையும் வாசிம் 3 விக்கெட் களையும் ராப் இரண்டு விக்கெட்களையும் இப்திகார் மற்றும் உஸ்மான் மீர் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்திருந்தனர்.
205 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் சாமான் 81 ரண்களும் சபிக் 68 ரண்களும் ரிஸ்வான் 25 ரன்களையும் குவித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் மிராஸ் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.இது குறித்து பேசிய பகார் ஜமான் கூறுகையில்,

நாங்கள் இந்தியாவிடம் தோற்றது பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியிருந்தார். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரிய போட்டி அதில் எந்த மாற்றமும் எங்களுக்குள் வரவில்லை என்று சொன்னால் நான் பேசுகிறேன் என்று அர்த்தமாகும். ஆனால் அனைத்து வீரர்களும் தொழில் முறை வீரர்கள் தான் மற்றும் அவர்கள் நிறைய போட்டிகளை விளையாடியுள்ளார்கள் மேலும் இந்தியாவுக்கு எதிராக போட்டியிலும் விளையாடி இருக்கின்றார்கள். இன்று நாங்கள் விளையாடுவதற்கு பார்த்தால் நாங்கள் மீண்டும் ரிதத்திற்க்கு வந்து விட்டோம் என்று நான் நினைக்கின்றேன் தென்னாப்பிரிக்காவுக்கு. எதிராக போட்டியை பார்க்கும் போது இது ஒரு நல்ல காம்பினேஷனாக அமைகின்றது. என்று அவர் கூறியிருந்தார்.



